TET சான்றிதழ் வாழ்நாள்
முழுவதும் செல்லும்
ஆசிரியர்
தகுதித் தேர்வு மதிப்பெண்
சான்றிதழ் இனி ஆயுள்
முழுமைக்கும் செல்லும்
என்று தமிழக அரசு
அரசாணை பிறப்பித்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அரசாணையில்:
தேசிய
ஆசிரியர் கல்வி நிறுவனம்
ஆசிரியர் தகுதித் தேர்வு
மதிப்பெண் சான்றிதழின் செல்லத்தக்க காலத்தினை வாழ் நாள்
முழுமைக்கும் நீட்டித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த
உத்தரவை மாநிலங்களும் பின்பற்றலாம் என்ற வழிகாட்டுதலை அடிப்படையாக கொண்டு தமிழகத்திலும் அமல்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி
தற்போது ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் ஏழு ஆண்டுகள்
வரைதான் செல்லும் என்ற
நடைமுறையில் திருத்தம் செய்து
இனி வாழ்நாள் முழுவதும்
செல்லுபடியாகும் வகையில்
மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பணிநாடுநர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வு
மதிப்பெண் சான்றிதழ் இனி
வாழ் நாள் முழுமைக்கும் செல்லத்தக்கது எனவும்
இதற்காக தனியாக சான்றிதழ்
பெற தேவையில்லை.