இளநிலை உதவியாளர், உதவிப் பொறியாளர், கள உதவியாளர், உதவி கணக்கு அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களில் காலியாக உள்ள 5,318 இடங்களை நிரப்ப வெளியிடப்பட்ட அறிவிப்பாணைகள் அனைத்தும் ரத்து செய்வதாக மின் வாரியம் அறிவித்துள்ளது.
அரசு பணி ஆட்சேர்ப்பு பணிகளை டி.என்.பி.எஸ்.சி. மட்டுமே மேற்கொள்ளும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கட்டணம் திருப்பித் தரப்படும் எனவும் மின்வாரியம் தெரிவித்துள்ளது.
மின்சார வாரியத்தில் கடந்த 2020- 2021ஆம் ஆண்டில் இளநிலை உதவியாளர், உதவிப் பொறியாளர் உள்ளிட்ட காலியாக இருக்க கூடிய 5,318 இடங்களை நிரப்ப தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இந்த அறிவிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும், அதே போல் இந்த இடங்களை நிரப்ப தேர்வு தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ரத்து செய்யப்படுவதாக கூறியுள்ளது.
இதனிடையே தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கட்டணம் வசூலிக்க பட்ட நிலையில் இதனை திருப்பி கொடுக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


