
TANCET நுழைவுச்சீட்டு வெளியீடு – 2024
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் TANCET தேர்வு என்பது முதுகலை பட்ட (PG) படிப்பிற்கான நுழைவுத் தேர்வாகும். இந்த வகையில் நடப்பாண்டின் (2024) MCA, MBA டிகிரிகளுக்கான TANCET தேர்வானது வருகின்ற மார்ச் மாதம் 9ம் தேதி காலை, மாலை என இரண்டு பிரிவுகளாக நடைபெறவுள்ளது. இத்தேர்வானது காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரையும், மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் TANCET 2024 தேர்வுக்கான நுழைவுச் சீட்டை அண்ணா பல்கலைக்கழகமானது இன்று (21.02.2024) வெளியிட்டுள்ளது. இதனை தேர்வர்கள் http://tancet.annauniv.edu/ என்ற இணையதள இணைப்பின் மூலம் பெற்றுக் கொள்ளலாம். மேலும் இந்த நுழைவுச் சீட்டை பெற விரும்பும் நபர்கள் login பக்கத்தில் தங்களது பதிவெண் மற்றும் கடவுச் சொல்லை சரியாக உள்ளிட வேண்டும். இத்தேர்வானது 100 மதிப்பெண்களுக்கு MCQ தேர்வு முறைப்படி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram

