
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் (27-12-2023)
(காலை 10:00 — மாலை 4:00 மணி)கண்டமனுார், அம்பாசமுத்திரம், ஸ்ரீரங்கபுரம், தப்புக்குண்டு, கோவிந்தநகரம், வெங்கடாசலபுரம், எம்.சுப்புலாபுரம், ஜி.உசிலம்பட்டி, சித்தார்பட்டி, கணேசபுரம், ஜி.ராமலிங்காபுரம், அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
கோவை, டிச.24: கோவை குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் பாராமரிப்பு பணிகள் வரும் 27ம் தேதி நடைபெறவுள்ளது.
ஆகையால், அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் இருக்காது. அதன் விபரம்: குனியமுத்தூர், புட்டுவிக்கி, இடையர்பாளையம், சுந்தராபுரம் ஒரு பகுதி, பி.கே புதூர், கோவைப்புதூர், நரசிம்மபுரம், சுண்டக்காமுத்தூர் ஒரு பகுதி ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்படும் என கோவை மின்பகிர்மான செயற்பொறியாளர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
அதேபோல, கோவை ஒத்தக்கால்மண்டபம் துணை மின் நிலையத்தில் வரும் 28ம் தேதி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. ஆகையால் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மலுமிச்சம்பட்டி ஒரு பகுதி, ஏழூர் பிரிவு, அரிசிபாளையம் ஒரு பகுதி, ஒத்தக்கால்மண்டபம் ஒரு பகுதி, உக்கிலிபாளையம், பிரிமியர் நகர், மயிலேறிபாளையம், மாம்பள்ளி, பெரியகுயிலி, ஓராட்டுக்குப்பை, தேகானி, செட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
ஆலங்குடி: ஆலங்குடி, மழையூா், வடகாடு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் ஆலங்குடி, பாச்சிக்கோட்டை, களபம், வெட்டன்விடுதி, ஆலங்காடு, அரசரடிப்பட்டி, கே.ராசியமங்கலம், மாங்கோட்டை, பாப்பான்விடுதி, செம்பட்டிவிடுதி, கோவிலூா், மழையூா், கூகைபுளியான்கொல்லை, நைனான்கொல்லை, கெண்டையன்பட்டி, துவாா், ஆத்தங்கரைவிடுதி, வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம்,புள்ளான்விடுதி, ஆலங்காடு, பள்ளத்திவிடுதி, பசுவயல், அரையப்பட்டி, சூரன்விடுதி உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை (டிச.27) காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய அலுவலகத்தினா் தெரிவித்துள்ளனா்.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow