தமிழகத்தில் சென்னை பல்கலைக்கழகத்தால் தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பி ஏ, பட்டப்படிப்பு, எம் ஏ.
பட்ட மேற்படிப்பு மற்றும் பிஜிடிஎல்ஏ, தொழிலாளர் சட்டங்களும் நிர்வாகவியல் சட்டமும் பட்டய படிப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் வி ஏ மற்றும் எம்ஏ போன்ற படிப்புகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. என் நிலையில் இளநிலை பட்டம் பெற்ற மாணவர்கள் முதுகலை பட்டம் மற்றும் பட்டய படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
💎 Join Our Premium Group – Download PDFs Directly 📚
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
இந்த படிப்புகளில் சேர விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து ஜூலை 12ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் எனவும் இதற்கு 200 ரூபாய் விண்ணப்பக் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு 100 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். விண்ணப்பிக்க ஜாதி சான்றிதழ் கட்டாயம். விண்ணப்பங்களை வருகின்ற ஜூலை 12ஆம் தேதிக்குள் “The Director, Tamilnadu Institute of Labour Studies, Chennai” என்ற பெயரில் எடுத்து பதிவு தபால் மற்றும் விரைவு அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


