
சோப்பு, சானிடைசர் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை தயாரிக்கும் முறைகள் குறித்தும் தொழில்முனைவோராக்குவதற்குமான பயிற்சியை தமிழ்நாடு அரசு வழங்குகிறது.
மூன்று நாள் பயிற்சி:
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில் “தொழிற்சாலை மற்றும் வீட்டு உபயோக பராமரிப்பிற்கு உதவும் இரசாயன பொருட்கள் தயாரித்தல் தொடர்பான செய்முறைப் பயிற்சி தொடர்பானது வரும் 13.11.2024 முதல் 15.11.2024 வரை மூன்று நாட்கள் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரையில் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் கட்டட வளாகம் சென்னையில் நடைபெற உள்ளது.
வீட்டு உபயோக பொருட்கள்:
பித்தளை மற்றும் செம்பு கிளீனர் திரவம், டாய்லெட் & டைல்ஸ் கிளீனர் கார் வாஷ் ஷாம்பு, சோப்பு திரவம், டிஷ் வாஷ் திரவம், ஃபானிச்சா மற்றும் மர பாலிஷ் திரவம், ஃப்ளோர் கிளீனர், ஃபேப்ரிக் சாப்டனர், கிளாஸ் கிளீனர், ஹேன்ட் வாஷ் ஹெர்பல ஃபீனைல், ஆயில் கிரீஸ் திரவம் ( அனைத்து உலோகங்கள் ) ரூம் ஃப்ரெஷனர் திரவம், துரு நீக்கி (அனைத்து உலோகங்கள்) மென்மையான சோப்பு, சானிடைசர், சோப்பு எண்ணெய், துருப்பிடிக்காத ஸ்டீல் பாலிஷ், வாஷிங் பவுடர், ஊதுபத்தி மற்றும் மெழுகுவர்த்தி போன்ற மேற்கண்ட தயாரிப்புகளுக்கு பயிற்சி அளிக்கப்படும் மற்றும் மூலப் பொருட்கள் கிடைக்கும் இடங்கள் தயாரிப்புகளை சோதனை செய்வது, அதனை எப்படி சந்தைப்படுத்துவது குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படும்.
தகுதி என்ன?
ஆர்வமுள்ளவர்கள் ஆண் / பெண் / திருநங்கைகள்) 18 வயதிற்கு மேற்பட்ட, குறைந்தப்பட்ச கல்வித் தகுதியாக 8-வகுப்பு தேர்ச்சிப் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் பங்கு பெறும் ஆண் / பெண்! திருநங்கைகள் தங்கிப் பயில்வதற்கு எதுவாக குறைந்த கட்டண வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி உள்ளது.
தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து முன் பதிவு செய்து கொள்ளலாம்.
‘முன்பதிவு அவசியம்’
மேலும், இப் பயிற்சிப் பற்றிய விவரங்களை அறிய / பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். அலுவலக வேலை நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ளலாம். முகவரி தொலைபேசி / கைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை இ.டி-ஐ-ஐ அலுவலக சாலை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை 600 032.
தொலைபேசி எண்கள்: 8668100181 / 9841336033
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

