TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக
செய்திகள்
ஆன்லைன் ரம்மியை தடை செய்து தமிழக அரசு உத்தரவு – 3 மாத கால சிறை அல்லது ரூ.5,000 அபராதம் அல்லது இரண்டுமே
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில்;
சூதாட்டம் அல்லாத இதர ஆன்லைன் விளையாட்டுகளுக்கு,
ஒழுங்குமுறை
ஆணையம்
அமைக்கவும்
முடிவு
செய்யப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற தலைமைச்செயலாளர்
தலைமையில்
ஆன்லைன்
விளையாட்டுகள்
ஒழுங்குமுறை
ஆணையம்
செயல்படும்.
ஆணையத்தின்
உறுப்பினர்களாக
IT வல்லுநர்,
உளவியல்
நிபுணர்,
ஆன்லைன்
விளையாட்டு
வல்லுநர்
ஆகியோர்
இருப்பார்கள்.
மேலும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு
அனுமதி
வழங்குவது,
தொடர்ந்து
கண்காணிப்பது,
தரவுகளை
சேகரிப்பது,
குறைகளுக்குத்
தீர்வு
காண்பது,
விதிகளை
மீறினால்
நடவடிக்கை
எடுக்கப்பரிந்துரைப்பது
உள்ளிட்ட
பணிகளை
ஆணையம்
மேற்கொள்ளும்.
ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களுக்கும்
தடை
விதிக்கப்பட்டுள்ளது.
நேரடியாகவோ,
மறைமுகமாகவோ
எந்த
ஒரு
ஊடகங்களிலும்,
செயலிகளிலும்
ஆன்லைன்
சூதாட்ட
விளம்பரம்
வெளியிடத்
தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு
ஆன்லைனில்
பணப்பரிமாற்றம்
செய்ய
வங்கிகள்
ஒத்துழைக்கவும்
தடை
விதிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன்
சூதாட்டத்தில்
ஈடுபடும்
நபர்களுக்கு
3 மாத
கால
சிறை
அல்லது
ரூ.5,000
அபராதம்
அல்லது
இரண்டுமே
தண்டனையாக
விதிக்கப்படும்.
சூதாட்ட விளம்பரங்களை
வெளியிடுவோருக்கு
ரூ.5
லட்சம்
அபராதம்
அல்லது
ஓராண்டு
சிறை
அல்லது
இரண்டுமே
தண்டனையாக
விதிக்கப்படும்.
சூதாட்டத்தை நடத்தும் நிறுவனம் அல்லது நபர்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம் அல்லது 3 ஆண்டுகள் சிறை அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும்.
இரண்டாம் முறை தவறிழைக்கும்
நபர்கள்
அல்லது
நிறுவனங்களுக்கு
முந்தைய
தண்டனையை
விட
இரட்டிப்பாக
தண்டனை
விதிக்கப்படும்.
ஆணையத்தால்
விதிக்கப்படும்
தண்டனைகளில்
நீதிமன்றம்
தலையிட
முடியாது.
ரம்மி,
போக்கர்
என்ற
இரு
சூதாட்ட
விளையாட்டுகளுக்குத்
தடை
விதிக்கப்பட்டுள்ளதாக
தெரிவித்துள்ளது.