HomeBlogதமிழக விவசாயிகளுக்கு சிறப்பு பரிசு அறிவிப்பு –முழு விபரங்கள்

தமிழக விவசாயிகளுக்கு சிறப்பு பரிசு அறிவிப்பு –முழு விபரங்கள்

TAMIL MIXER
EDUCATION.
ன்
விவசாய செய்திகள்

தமிழக விவசாயிகளுக்கு
சிறப்பு
பரிசு
அறிவிப்பு
முழு
விபரங்கள்

தமிழகத்தில் விவசாயிகளின்
நலன்
கருதி
பல்வேறு
வகையான
நலத்திட்டங்களை
அரசு
செயல்படுத்தி
வருகிறது.
அந்த
வகையில்
விவசாயிகள்
அதிக
மகசூலை
பெறும்
வகையில்
நவீன
தொழில்நுட்ப
வசதிகள்
அறிமுகப்படுத்தப்பட்டு
வருகிறது.
அத்துடன்
விவசாயிகளை
ஊக்கப்படுத்தும்
வகையில்
தமிழக
அரசு
இவர்களுக்கு
பல்வேறு
வகையான
விருதுகளை
வழங்கி
வருகிறது.

அந்த வகையில் நடப்பு ஆண்டில் வேளாண் ஏற்றுமதியில்
சிறந்து
விளங்கும்
விவசாயிகளுக்கு
பரிசு
ஒன்றை
தமிழக
அரசு
அறிவித்துள்ளது.
இப்பரிசிற்கு
அனைத்து
மாவட்டத்தை
சேர்ந்த
விவசாயிகளும்
விண்ணப்பிக்கலாம்
என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
இதற்கு
விண்ணப்பிக்க
வயது
வரம்பு
கிடையாது.

இதற்கு விண்ணப்பிக்க
விரும்பும்
விண்ணப்பதாரர்கள்
உழவன்
செயலியில்
கொடுக்கப்பட்டிருக்கும்
படிவத்தை
நிரப்பி
ரூ.100/-
பதிவு
கட்டணம்
செலுத்தி
படிவத்தை
சமர்ப்பிக்க
வேண்டும்.

இந்த படிவத்தில் விண்ணப்பதாரரின்
பெயர்,
முகவரி,
ஆதார்
எண்,
தந்தையின்
பெயர்
உள்ளிட்ட
விவரங்களை
கொடுக்க
வேண்டும்.
மேலும்
விவசாயிகள்
ஏற்றுமதி
செய்த
விளை
பொருளின்
பெயர்,
ஏற்றுமதி
செய்யப்பட்ட
நாடுகள்,
பயிர்
விளைவிக்க
மேற்கொள்ளப்பட்ட
வழிமுறைகள்
ஆகியவற்றையும்
உள்ளிட்ட
வேண்டும்.

இதில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு
ரூ.2
லட்சம்
பரிசாக
வழங்கப்படும்
என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால்
அனைத்து
விவசாயிகளும்
இப்போட்டியில்
கலந்து
கொண்டு
பயன்
அடையுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular