Monday, August 11, 2025
HomeBlogதமிழக மின் கட்டண உயர்வு - பொதுமக்கள் கருத்து பதிவு செய்ய கூட்டம்

தமிழக மின் கட்டண உயர்வு – பொதுமக்கள் கருத்து பதிவு செய்ய கூட்டம்

தமிழக மின் கட்டண உயர்வு
பொதுமக்கள் கருத்து பதிவு
செய்ய கூட்டம்

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்துறை அமைச்சர்
செந்தில்பாலாஜி அண்மையில்
அறிவித்தார். அதாவது மத்திய
அரசின் அழுத்தம் காரணமாக
மின் கட்டணம் உயர்த்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். அதன்படி, 8 ஆண்டுகளுக்கு பின்னர்
தமிழகத்தில் மின் கட்டணம்
உயர்த்தப்படுகிறது.

அதாவது
200
யூனிட்டுகளுக்கு மேல்
2
மாதங்களுக்கு பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு
27.50
ரூபாயும், 300 யூனிட் வரை
பயன்படுத்தினால் மாதம்
ஒன்றுக்கு 72.50 ரூபாயும், உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல,
2
மாதங்களுக்கு மொத்தம்
400
யூனிட்டுகள் வரை மின்
நுகர்வு செய்யும் 18.82 லட்சம்
வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (7.94 சதவீதம்) மாதம்
ஒன்றுக்கு ரூ.147.50 உயர்த்த
உத்தேசிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக
500
யூனிட் மின்சாரத்துக்கு மேல்
பயன்படுத்துபவர்களுக்கு இரட்டிப்பு செலவு ஏற்படும் அளவு
மின் கட்டணம் உயர
உள்ளது. இந்த மின்
கட்டண உயர்வுக்கு பல்வேறு
தரப்பிலிருந்தும் எதிர்ப்பு
கிளம்பியுள்ளது.

இதையடுத்து மின் கட்டண உயர்வு
பரிந்துரை தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது.
மேலும் மக்கள் தங்களது
கருத்துக்களை ஆன்லைன்
மூலமாகவும் தெரிவிக்கலாம் என்று
அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே பொது மக்களை நேரில்
அழைத்து கருத்து கேட்கவும்
அரசு முடிவு செய்துள்ளது.அந்த வகையில் சென்னை,
கோவை, மதுரை நகரங்களில் இதற்கான கூட்டங்கள் நடத்தப்பட
உள்ளன. இதன் அடிப்படையில் கோவையில் வரும் 16ம்
தேதி எஸ்.என்.ஆர்.
கல்லூரியில் பொதுமக்களிடம் கருத்து
கேட்கப்படுகிறது. இதையடுத்து மதுரையில் தல்லாகுளத்தில் உள்ள
லட்சுமி சுந்தரம் அரங்கில்
18
ம் தேதி கருத்து
கேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது. தொடர்ந்து சென்னையில் 22-ந்
தேதி கலைவாணர் அரங்கில்
கருத்து கேட்பு கூட்டம்
நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அன்று காலை
10
மணிக்கு கூட்டம் தொடங்கும்.
அந்த கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது கருத்துக்களை பதிவு
செய்யலாம். அவர்களை அழைத்து
மின் வாரியம் குறைகளை
கேட்டறியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments