HomeBlogதமிழக மின் வாரிய உதவி பொறியாளர் வேலை தேர்வு தேதியை மாற்ற முடிவு

தமிழக மின் வாரிய உதவி பொறியாளர் வேலை தேர்வு தேதியை மாற்ற முடிவு

 

உதவி பொறியாளர்
வேலை தேர்வு தேதியை
மாற்ற முடிவு

தமிழக
மின் வாரியம், 600 உதவி
பொறியாளர்களை நியமிக்க,
2020-
ல் விண்ணப்பங்கள் பெற்றது.

ஒரு
லட்சம் இன்ஜினியரிங் பட்டதாரிகள் விண்ணப்பித்தனர்.கணினி
வழியாக எழுத்து தேர்வு
நடத்தி, அதிக மதிப்பெண்
எடுப்பவருக்கு, அரசின்
இட ஒதுக்கீட்டு அடிப்படையில், வேலை வழங்கப்பட உள்ளது.

கொரோனா
ஊரடங்கால், 2020-ல், தேர்வு
நடத்தப்படவில்லை. இந்நிலையில், உதவி பொறியாளர் பதவிக்கான
தேர்வு, ஏப்., 24, 25, மே,
1, 2,
ஆகிய தேதிகளில் நடத்த
உத்தேசிக்கப்பட்டு உள்ளதாக,
மின் வாரியம், பிப்.,
12
ல் அறிவித்தது.

மே
தினத்தை முன்னிட்டு மே
1
பொது விடுமுறை. சட்டசபை
தேர்தல் ஓட்டு எண்ணிக்கை
மே 2ல் நடக்கிறது.
இதனால், அன்றைய நாட்களில்
தேர்வு நடத்தப்படுமா என,
விண்ணப்பதாரர்கள் சந்தேகம்
எழுப்பி வருகின்றனர்.இதையடுத்து, தேர்வு தேதியை மாற்ற
முடிவு செய்துள்ள மின்
வாரியம், வேறு தேதி
தொடர்பாக, பரிசீலித்து வருகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular