TAMIL MIXER
EDUCATION.ன்
கல்வி
செய்திகள்
தமிழ்வழி படிப்புகள் நீக்கப்படாது – அண்ணா பல்கலை
சிவில், மெக்கானிக்கல்லில்
தமிழ்வழி
படிப்புகள்
நிறுத்தப்படாது
என
அண்ணா
பல்கலைக்கழக
துணைவேந்தர்
பேட்டியளித்துள்ளார்.
தமிழ்நாட்டில்
அண்ணா
பல்கலைக்கழகம்,
13 உறுப்புக்
கல்லூரிகள்,
அரசு
மற்றும்
அரசு
உதவி
பெறும்
பொறியியல்
கல்லூரிகள்,
தனியார்
சுயநிதிப்
பொறியியல்
கல்லூரிகள்
உட்பட
523 பொறியியல்
கல்லூரிகள்
உள்ளன.
இவை
அனைத்தும்
அண்ணா
பல்கலைக்கழகத்தின்
இணைப்பு
அங்கீகாரம்
பெற்று
இயங்கி
வருகின்றன.
இந்த நிலையில், பொறியியல் படிப்புகளைத்
தமிழ்
வழியிலும்
மாணவர்கள்
படிப்பதற்கு
முந்தைய
திமுக
ஆட்சியில்
கருணாநிதி
முதல்வராக
இருந்தபோது
நடவடிக்கை
எடுக்கப்பட்டது.
முதலில் அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளில்
சிவில்,
மெக்கானிக்கல்
உள்ளிட்ட
சில
படிப்புகள்
தமிழ்
வழியில்
வழங்கப்பட்டன.
அதன்பிறகு
பல்கலைக்கழகத்தின்
உறுப்பு
கல்லூரிகளிலும்
இந்த
நடைமுறை
அமலுக்கு
வந்தது.
இந்த
நிலையில்
வரும்
கல்வியாண்டு
முதல்,
அண்ணா
பல்கலைக்கழக
உறுப்பு
கல்லூரிகளில்
தமிழ்
வழி
படிப்புகள்
தற்காலிகமாக
மூடப்படுவதாக
அறிவிக்கப்பட்டது.
ஆரணி, திண்டிவனம், விழுப்புரம், திண்டுக்கல், ராமநாதபுரம், அரியலூர், பண்ருட்டி உள்ளிட்ட 11 உறுப்பு கல்லூரிகளில்
தமிழ்வழியில்
மெக்கானிக்கல்,
சிவில்
உள்ளிட்ட
பாடப்
பிரிவுகள்
தற்காலிகமாக
நீக்கப்படுவதாக
அறிவிக்கப்பட்டிருந்தது.
போதிய
மாணவர்
சேர்க்கை
இல்லாததால்
இந்த
நடவடிக்கை
என
தெரிவிக்கப்பட்டது.
மேலும் பல்கலைகழகத்தின்
இந்த
அறிவிப்பு
குறித்து
தமிழக
பாஜக
தலைவர்
அண்ணாமலை
உள்ளிட்டோர்
கடும்
கண்டனம்
தெரிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து
அண்ணா
பல்கலைகழக
துணை
வேந்தர்
வேல்ராஜ்,
பேட்டியளித்தார்.
அவர் கூறியதாவது:
அண்ணா பல்கலைக்கழகத்தின்
சில
உறுப்பு
கல்லூரிகளின்
சிவில்,
மெக்கானிகல்
பிரிவுகளில்
10-க்கும்
குறைவாக
மாணவர்
சேர்க்கை
இருந்ததால்
சிண்டிகேட்
குழு
அமைத்து
பரிசீலனை
செய்து,
அந்த
கல்லூரிகளில்
தற்காலிகமாக
மாணவர்
சேர்க்கை
நிறுத்தி
வைக்க
முடிவு
செய்யப்பட்டது.
எந்த
பிரிவில்
மாணவர்
சேர்க்கை
குறைவாக
இருக்கிறது
என்று
பார்த்து
அதற்கு
பதில்
வேறு
பொறியியல்
பிரிவுகளை
சேர்க்க
யோசிக்கப்பட்டது.
அதனை சிலர் தமிழ் வழிக் கல்வியை புறக்கணிப்பது
போல்
அமைச்சரிடம்
புகார்
அளித்துள்ளனர்.
மேலும்,
தமிழ்
வழி
கல்வியை
நிறுத்த
வேண்டும்
என்ற
எந்த
அறிவிப்பும்
வெளியிடப்படவில்லை.
இந்த கல்வியாண்டு எந்த உறுப்பு கல்லூரியிலும்
தமிழ்
பொறியியல்
பாடப்பிரிவுகள்
நீக்கப்படாது.
உயர்கல்வித்துறை
அமைச்சரின்
அறிவுறுத்தல்
படி,
11 உறுப்பு
கல்லூரிகளில்
சிவில்,
மெக்கானிக்கல்
பாடங்கள்
நிறுத்தி
வைக்கப்படுவதாக
வெளியிடப்பட்ட
ஆணை
திரும்ப
பெறப்படுகிறது.
பொறியியல் பாட புத்தகங்கள் சரியான அளவு தமிழில் மாற்றப்பட்ட பின்பு அனைத்து பொறியியல் பாடப் பிரிவுகளும் தமிழ் மொழியில் கொண்டு வரப்படும்.