TAMIL MIXER EDUCATION.ன்
போட்டி
செய்திகள்
NEC கல்லூரியில் மாணவா்களுக்கு தனித்திறன் போட்டிகள்
கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் இம்மாதம் 18ம் தேதி
பள்ளி மாணவா்களுக்கான மாநில
அளவிலான தனித்திறன் போட்டிகள்
நடைபெறுகிறது.
இதுகுறித்து கல்லூரி முதல்வா் வெளியிட்டுள்ள அறிக்கை:
பள்ளி
மாணவா்களின் தனித்திறமைகளை வெளிக்கொணரும் வகையில், ‘என்.இ.சி. பிளையா் யோதா
– 2ஓ22′ எனும்
மாநில அளவிலான தனித்திறன் போட்டிகள் இம்மாதம் 18ம்
தேதி கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.
இதில்,
9ம் வகுப்பு முதல்
12ம் வகுப்பு வரை
பயிலும் மாணவா்களுக்கு நாட்டுப்புற நடனம், இசைக்கருவி வாசிக்கும் போட்டி, 9ம் வகுப்பு
முதல் 10ம் வகுப்பு
வரை பயிலும் மாணாக்கா்களின் நினைவாற்றலை சோதிக்க ‘திங்கிங் தாமாக்கா‘ மற்றும்
படைப்பாற்றலை உருவாக்க
காகித கைவினை கலை
எனும் போட்டி, 10ம்
வகுப்பு முதல் 12ம்
வகுப்பு வரை பயிலும்
மாணவா்களின் அறிவுத்திறனை வெளிக்கொணரும் வகையில், ‘ஸ்டெம்‘ எனும்
விநாடி –வினா போட்டி
மற்றும் கற்பனை ஆற்றலை
வெளிப்படுத்த பயாஸ்கோப்
எனும் போட்டி உள்ளிட்ட
போட்டிகள் நடைபெறுகிறது.
இப்போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு பாராட்டுச் சான்றிதழ், பரிசுகள் மற்றும்
ஒட்டுமொத்த புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடம்
பிடிக்கும் பள்ளிகளுக்கு சுழற்கோப்பை ஆகியவை வழங்கப்படும்.
போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் மாணவா், மாணவிகள் https://nec.edu.in/ என்ற கல்லூரி இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப
படிவத்தில் தங்களுடைய மின்னஞ்சல் முகவரி மூலமாக பதிவு
செய்து போட்டியில் கலந்து
கொள்ளலாம்.
இப்போட்டி
குறித்த சந்தேகங்களுக்கு 96265 66421, 79048 21001
என்ற கைப்பேசி எண்களில்
தொடா்பு கொள்ளலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here