தேனியில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஏப்.20 ஆம் தேதி முதல் வரும் ஜூன் 26 ஆம் தேதி வரை கோடை கால நீச்சல் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. தேனி மாவட்ட விளையாட்டு மைதானம் அருகே உள்ள நீச்சல் குளத்தில் நடைபெறும் முகாமில், குறைந்தபட்சம் 120 செ.மீ., உயரத்திற்கும் மேல் உள்ள பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம்.
தினமும் ஒரு மணி நேரம் வீதம், மொத்தம் 12 நாள்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக் கட்டணமாக மொத்தம் ரூ.1,200 செலுத்த வேண்டும். பயிற்சி குறித்த விவரத்தை தேனி மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரிலும், 04546-253090, 74017 03505, 99949 44166 ஆகிய எண்களிலும் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


