HomeBlogதமிழக அரசு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கோடைகால பயிற்சி வகுப்புகள் – கல்வித்துறை விளக்கம்
- Advertisment -

தமிழக அரசு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கோடைகால பயிற்சி வகுப்புகள் – கல்வித்துறை விளக்கம்

 

Summer Training Classes for Tamil Nadu Government School and College Students - Education Description

தமிழக அரசு
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கோடைகால பயிற்சி வகுப்புகள்கல்வித்துறை விளக்கம்

தமிழகத்தில் CORONA இரண்டாம் அலை
தாக்கம் வேகமாக பரவி
வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கடந்த
ஆண்டு மார்ச் மாதம்
முதல் கொரோனா பரவல்
தொடங்கியது. அன்று முதல்
தற்போது வரை பள்ளிகள்
திறக்கப்படவில்லை. ஆன்லைன்
மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது.

தற்போது
வரை கொரோனா தாக்கம்
குறையாத காரணத்தினால் பள்ளிகள்
தற்போது வரை திறக்கப்படவில்லை. 9, 10, 11, 12 ஆம்
வகுப்பு மாணவர்களுக்கு மட்டும்
வகுப்புகள் திறக்கப்பட்டன. அதன்
பின்னர் 12 ஆம் வகுப்பு
மாணவர்கள் தவிர அனைத்து
மாணவர்களுக்கும் வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் அரசு பள்ளிகளில் கோடைகால
விடுமுறை பயிற்சி திட்டங்கள் வழங்கப்படும்.

ஆனால்
கொரோனா காரணமாக கடந்த
ஆண்டு இந்த வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன. இந்த
ஆண்டு பயிற்சி வகுப்புகள் நடைபெறுமா என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் கேள்வி
எழுப்பப்பட்டது.

அவர்கள் கூறியதாவது:

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகமாக
பரவி வருகிறது. இதனால்
மாணவர்களுக்கு இந்த
ஆண்டும் இந்த பயிற்சி
திட்டங்களை நடத்த முடியாது.
ஆனால் 20 நாட்கள் நடத்தப்படும் இந்த பயிற்சி வகுப்பிற்கு அரசு கல்லூரிகளில் மாநில
அளவில் இயற்பியல், வேதியியல்,
உயிரியல் மற்றும் கணித
துறைகளில் இருந்து மாணவர்கள்
தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -