பருத்தி சாகுபடி
திட்டத்தில் விவசாயிகளுக்கு விதைகள்
மற்றும் இடுபொருள்கள் மானியம்
நீடித்த
நிலையான பருத்தி சாகுபடி
திட்டத்தின்கீழ் பருத்தி
சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு விதைகள் மற்றும் இடுபொருள்கள் மானியத்தில் வழங்கப்படுவதாக வேளாண்மைத் துறை இணை இயக்குநா்
ஆா்.சித்ராதேவி தெரிவித்துள்ளார்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவை
மாவட்டத்தில் ஆண்டுதோறும் சராசரியாக 468 ஹெக்டோ பரப்பளவில் பருத்தி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. அன்னூா், பொள்ளாச்சி (வடக்கு), கிணத்துக்கடவு, எஸ்.எஸ்.குளம்,
தொண்டாமுத்தூா் ஆகிய
வட்டாரங்களில் பி.டி.பருத்தி,
சுஜாதா, எல்.ஆா்.ஏ.
5166, எம்.சி.யு.8
ஆகிய பருத்தி ரகங்கள்
சாகுபடி செய்யப்படுகின்றன.
ஹெக்டேருக்கு 416 கிலோ பஞ்சு வீதம்
சராசரியாக 1,128 பேல் பஞ்சு
உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்நிலையில், கோவை மாவட்டத்தில் பருத்தி
சாகுபடி பரப்பளவை அதிகப்படுத்தும் வகையில், மாநில அரசு
சார்பில் நீடித்த நிலையான
பருத்தி சாகுபடி திட்டம்
செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின்கீழ் விதைகள், நுண்ணூட்ட
கலவை, உயிர் உரங்கள்,
ஒருங்கிணைந்த பூச்சி
நிர்வாகத்துக்கான இடுபொருள்கள் ஆகியவை மானிய விலையில்
வழங்கப்படுகின்றன. விதைப்பு
முதல் அறுவடை வரை
மேற்கொள்ள வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை பயிற்சி அளிக்கப்படுகிறது.
எனவே,
அரசின் மானிய திட்டத்தை
பயன்படுத்தி பருத்தி சாகுபடி
பரப்பை அதிகரிக்க வேண்டும்.