வீட்டின் கூரை
மீது பொருத்தப்படும் சோலார்
பேனலுக்கு மானியம்
சூரிய
ஒளிசக்தி பற்றிய இந்திய
அளவிலான விழிப்புணர்வு பிரச்சாரத்தை மத்திய அரசு தொடங்கி
உள்ளது.
வீட்டின்
கூரை மீது பொருத்தப்படும் சூரிய ஒளிசக்தி பற்றிய
இந்திய அளவிலான விழிப்புணர்வு பிரச்சாரத்தை கர்நாடக
மாநிலம் பிடாரில் மத்திய
புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை
அமைச்சர் பகவாந்த் கூபா
தொடங்கி வைத்தார்.
துவக்க
விழாவில் பேசிய அமைச்சர்
திரு கூபா, மக்களின்
பங்களிப்பு இல்லாமல் எத்தகைய
பெரிய யோசனையும் வெற்றி
பெறாது என்று கூறினார்.
உலக வெப்பமயமாதல் மற்றும்
பருவநிலை மாற்ற பிரச்சினையில் சாமானிய மக்களும் பங்குபெறும் வாய்ப்பை கூரை மீது
பொருத்தப்படும் சூரிய
ஒளிசக்தித் திட்டம் அளிப்பதாக
அவர் தெரிவித்தார்.
பிரதமர்
மோடி நிர்ணயித்துள்ள பஞ்சாமிர்த இலக்குகளை சுட்டிக்காட்டிய அமைச்சர்,
2030-ஆம் ஆண்டிற்குள் 500 ஜிகாவாட்
புதை படிவம் அல்லாத
எரிசக்தித் திறனை அடைவதை
நோக்கி அமைச்சகம் பணியாற்றி
வருவதாகக் குறிப்பிட்டார்.
மத்திய
அரசு வழங்கும் மானியம்
குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும. மேலும்
கூரை மீது பொருத்தப்படும் சூரிய ஒளிசக்தித் திட்டம்
முக்கிய பங்கு வகிக்கும்
என்றும், இந்த இலக்கை
அடைவதற்கு இரண்டு மற்றும்
மூன்றாம் தர நகரங்கள்
அதிகபட்ச திறனை பெற்றிருப்பதாகவும் கூறினார்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


