TAMIL MIXER EDUCATION.ன்
கடலூர் மாவட்ட செய்திகள்
கடலூர் மாவட்ட செய்திகள்
ஜவுளி பூங்கா
அமைப்பதற்கு மானியம்
தமிழகத்தில் உள்ள ஜவுளி நிறுவனங்களில் சிறிய அளவில் ஜவுளி
பூங்கா அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
பூங்காவை
அமைக்க முன் வருபவர்களுக்கு அரசு சார்பில் 2 கோடியே
50 லட்சம் ரூபாய் வரை
மானியம் வழங்கப்படும்.
பூங்கா
அமைப்பதற்கு குறைந்தபட்சம் 2 ஏக்கர்
நிலம் இருக்க வேண்டும்.
அதன் பிறகு பூங்காவில் அரசு கூறும் அனைத்து
உள்கட்டமைப்பு வசதிகளும்
இருக்க வேண்டும்.
அதன்படி
பூங்காவில் 2 தொழிற்கூடங்கள், தொலைத்தொடர்பு வசதிகள், கழிவு நீர்
சுத்திகரிப்பு நிலையம்,
தெருவிளக்கு வசதி, மின்சார
வசதி, தண்ணீர் விநியோகம்,
கழிவுநீர் வாய்க்கால், சுற்று
சுவர், சாலை வசதி,
உற்பத்தி தொடர்பான எந்திரங்கள் மற்றும் தளவாடங்கள், அலுவலகம்,
இதர இனங்கள், பணியாளர்கள் விடுதி, உணவகம், குழந்தைகள் காப்பகம், மூலப்பொருட்கள் மையம்,
கிடங்கு வசதி, வியாபாரம்
மையம், பயிற்சி மையம்,
ஆய்வுக்கூடம், வடிவமைப்பு மையம் போன்றவைகள் இருக்க
வேண்டும்.
இந்த
திட்டத்தின்படி பூங்கா
அமைக்க முன் வருபவர்கள் 9443943450 என்ற தொலைபேசி
எண்ணிலும், மண்டல இயக்குனர்,
துணிநூல் துறை, 1A-2/1, சங்ககிரி
பிரதான சாலை, குகை
சேலம்-6 என்ற அலுவலகத்திலும் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


