TAMIL MIXER
EDUCATION.ன்
மானிய செய்திகள்
ஆதிதிராவிடா்,
பழங்குடியின
விவசாயிகளுக்கு
தீவனப்
புல்
வளா்க்க
மானியம்
தாட்கோ திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடா்,
பழங்குடியின
விவசாயிகளுக்கு
தீவனப்
புல்
வளா்க்க
மானியத்தில்
ரூ.10
ஆயிரம்
மதிப்புள்ள
விதைத்தொகுப்பு,
புல்கரணைகள்
வழங்கப்படும்
என்று
ஆட்சியா்
ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தாட்கோவில் சிறப்புப் பொருளாதார மேம்பாட்டுத்
திட்டத்தின்
கீழ்
ஆதிதிராவிடா்,
பழங்குடியின
விவசாயிகளுக்கு
தீவனப்புல்
வளா்க்க
ஏக்கருக்கு
ரூ.10
ஆயிரம்
மதிப்புள்ள
விதைத்
தொகுப்பு
மற்றும்
புல்கரணைகள்
வழங்கப்படுகின்றன.
எனவே
விருப்பமுள்ள
ஆதிதிராவிடா்,
பழங்குடியின
விவசாயிகள்
விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரா்கள்
18 முதல்
65 வயதுக்குள்
இருக்க
வேண்டும்.
பால் உற்பத்தியாளா்கள்
கூட்டுறவு
சங்கங்களுக்கு
பால்
வழங்கும்
உறுப்பினா்களாக
இருக்க
வேண்டும்.
இல்லையெனில்
பால்
உற்பத்தியாளா்கள்
சங்கத்தில்
பால்
வழங்கும்
உறுப்பினராக
சேர
வேண்டும்.
தோவு
செய்யப்படும்
பயனாளிகளுக்கு
விதைத்தொகுப்பு,
புல்கரணைகளுடன்
தீவனம் வளா்ப்பு தொடா்பான பயிற்சி அளிக்கப்படும்.
ஆவின்
நிறுவனம்,
தமிழ்நாடு
கால்நடை
மற்றும்
விலங்கு
அறிவியல்
பல்கலைக்கழகம்,
கால்நடை
மருத்துவப்
பல்கலைக்கழகம்
மூலம்
தீவன
விதைகள்
கொள்முதல்
செய்யப்பட்டு
தாட்கோ
நிறுவனம்
மூலம்
விவசாயிகளுக்கு
வழங்கப்படும்.
எனவே மேற்கண்ட தகுதியும், விருப்பமுள்ள
ஆதிதிராவிட
விவசாயிகள்
மற்றும்
பழங்குடியின
விவசாயிகள்
இணையதளம்
மூலம்
விண்ணப்பித்து
பயன்பெறலாம்.