காவல் சார்பு ஆய்வாளர் பணிக்கான (Sub inspector of Police) நேர்முகத் தேர்வுக்கு இலவச பயிற்சி!
தமிழ்நாடு காவல் துறையில் காலியாக உள்ள 750 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு முடிந்துள்ள நிலையில் இறுதிக் கட்டமாக நேர்முகத் தேர்வு நடைபெறவுள்ளது.
நேர்முகத் தேர்வுக்கு வழிகாட்டும் வகையில் மாதிரி நேர்காணல் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுக்கான அணுகுமுறைப் பயிற்சி ஆகியவற்றை ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி நடத்த உள்ளது.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
இந்த இலவச மாதிரி நேர்முகத் தேர்வானது, தமிழ்நாடு காவல்துறையின் முன்னாள் தலைவர் டாக்டர் ஆர்.நட்ராஜ் ஐ.பி.எஸ், அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது.
கடந்த ஆண்டில், ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி நடத்திய ‘காவல் சார்பு ஆய்வாளர் நேர்முகத் தேர்வு யிற்சியில்’ கலந்து கொண்டவர்கள் அதிக அளவில் வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்பதிவு செய்க:
இந்த மாதிரி நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ள, ‘Sub-Inspector Free Mock Interview’ என்று டைப் செய்து தங்களது முகவரியை 9786844111-என்ற செல்போன் எண்ணுக்கு வாட்ஸ்அப் அனுப்பி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow