HomeBlogகாபி தரத்திற்கு படிப்பா....???? PG DIPLOMA IN COFFEE QUALITY MANAGEMENT

காபி தரத்திற்கு படிப்பா….???? PG DIPLOMA IN COFFEE QUALITY MANAGEMENT

TAMIL MIXER EDUCATION.ன்
கல்வி
செய்திகள்

காபி தரத்திற்கு படிப்பா….???? PG DIPLOMA IN COFFEE
QUALITY MANAGEMENT

POST GRADUATE DIPLOMA IN COFFEE
QUALITY MANAGEMENT:

பி.ஜி.டி.சி.க்யூ.எம்., முக்கியத்துவம்:

இந்திய காபி தொழில்துறையில் நிலவும், முறையான பயிற்சி பெற்ற மற்றும் துறை சார்ந்த திறன் கொண்ட காபி சுவையாளர்களுக்கான தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இப்படிப்பு வழங்கப்படுகிறது.

பாடப்பிரிவுகள் உள்ளடக்கம்:

காபி சாகுபடி நடைமுறைகள், அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை மற்றும் நடைமுறைகள், காபி தர மதிப்பீடு, வறுத்தல் மற்றும் காய்ச்சும் நுட்பங்கள், சந்தைப்படுத்தல் மற்றும் வர்த்தகம், தரம் உத்தரவாத அமைப்புகள் (கோட்பாடு மற்றும் நடைமுறை அமர்வுகள்) ஆகியவை அடங்கும்.

கால அளவு:

மூன்று பருவங்களுடன் 12 மாதங்கள் கொண்ட இப்படிப்பு ஆங்கில மொழியில் வழங்கப்படுகிறது.

கர்நாடக மாநிலம் சிக்மகலூரில் உள்ள சி.சி.ஆர்.., மத்திய காபி ஆராய்ச்சி நிறுவனத்தில் முதல் பருவமும், பெங்களூருவில் மீதமுள்ள இரண்டு பருவங்களும் பயிற்றுவிக்கப்படுகிறது.

தகுதி:

உயிரியல், விலங்கியல், வேதியியல், உயிரிதொழில்நுட்பம், உயிரி அறிவியல், உணவு தொழில்நுட்பம், உணவு அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல் ஆகிய பாடங்களில் ஏதாவது ஒன்றை இளநிலை பட்டப்படிப்பில் படித்திருக்க வேண்டும் அல்லது வேளாண்மை அறிவியல் துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

கட்டணம்:

2 லட்சத்து 50 ஆயிரம். எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கல்விக்கட்டணத்தில் 50 சதவீத விலக்கு அளிக்கப்படும்.

தங்குமிடம்:

சி.சி.ஆர்..,யில் வழங்கப்படும் முதல் மூன்று மாதத்திற்கான படிப்பில் தங்குமிடம் இலவசமாக வழங்கப்படுகிறது.

முன்னுரிமை:

இப்படிப்பில் சேர தகுதியுள்ள யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் என்றபோதிலும், காபி துறையை சார்ந்த நிறுவனங்களால் ஸ்பான்சர் செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

தேர்வு செய்யப்படும் முறை:

கல்வி திறன், நேர்காணல் மற்றும் உணர்ச்சி மதிப்பீட்டு சோதனை ஆகியவற்றின் அடிப்படையில் பிரத்யேக குழுவால் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்டம்பர் 16

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: செப்டம்பர் 30

விபரங்களுக்கு: www.indiacoffee.org

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular