HomeBlogமாணவ, மாணவிகளின் கல்விக் கட்டணம், கல்வி உபகரணங்கள் அனைத்தும் இலவசம் - முதல்வர்

மாணவ, மாணவிகளின் கல்விக் கட்டணம், கல்வி உபகரணங்கள் அனைத்தும் இலவசம் – முதல்வர்

Students' tuition fees, educational equipment are all free - Chief

மாணவ, மாணவிகளின் கல்விக் கட்டணம், கல்வி
உபகரணங்கள் அனைத்தும் இலவசம்
–  
முதல்வர்

இந்த
ஆண்டு அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல்
கல்லூரியில் சேரும் அனைத்து
மாணவ, மாணவியர்களின் கல்விக்
கட்டணம், கல்வி உபகரணங்கள் அனைத்தும் முதலமைச்சர் ஏற்பாட்டின்படி இலவசமாக வழங்கப்படும்.

2021-2022ம்
ஆண்டிற்கான இந்து சமய
அறநிலையத் துறை மானியக்
கோரிக்கையில் இந்து
சமய அறநிலையத்துறையின் சார்பில்
பத்துக் கலை மற்றும்
அறிவியல் கல்லூரிகள் துவக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்
தொடர்ச்சியாக, சென்னை
கொளத்தூர், நாமக்கல் மாவட்டம்
திருச்செங்கோடு, திண்டுக்கல் மாவட்டம்தொப்பம்பட்டி, தூத்துக்குடி மாவட்டம்விளாத்திகுளம் ஆகிய
நான்கு இடங்களில் B.Com, BBA, BCA,
B.Sc. Computer Science
ஆகிய நான்கு பாடப்
பிரிவுகளுடன் கலை
மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கிட உயர் கல்வித்துறை அனுமதி அளித்து அரசாணை
வெளியிடப்பட்டது. முதலமைச்சர் மு..ஸ்டாலின்
நேற்று இந்து சமய
அறநிலையத்துறை சார்பில்
கொளத்தூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல்
கல்லூரியை தொடங்கி வைத்தார்.

இந்நான்கு
கலை மற்றும் அறிவியல்
கல்லூரிகளில் சென்னை,
கொளத்தூரில், மயிலாப்பூர் அருள்மிகு
கபாலீசுவரர் திருக்கோயில் சார்பில்,
அருள்மிகு சோமநாத சுவாமி
திருக்கோயிலுக்குச் சொந்தமான
சுமார் 5 ஏக்கர் நிலப்
பரப்பில் கல்லூரி தொடங்கிட
திட்டமிடப்பட்டு, நடப்பு
கல்வி ஆண்டிலேயே அருள்மிகு
கபாலீசுவரர் கலை மற்றும்
அறிவியல் கல்லூரி என்ற
பெயரில் சென்னை, கொளத்தூர்,
எவர்வின் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தற்காலிகமாக நடத்திட
நடவடிக்கை எடுக்கப்பட்டது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

இக்கல்லூரியில் மாணவ மாணவியர் சேர்க்கைக்கான அறிவிப்பு 8.10.2021 அன்று
வெளியிடப்பட்டு இதுவரை
210
மாணவ, மாணவியர்கள் சேர்ந்துள்ளனர். மேலும், இக்கல்லூரிக்குப் பல்கலைக்கழக விதிமுறைகளின் அடிப்படையில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட 9 நபர்களுக்கும், ஒரு
நூலகர் மற்றும் ஒரு
உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு முதலமைச்சர் 21.10.2021 அன்று
பணிநியமன ஆணைகளை வழங்கினார். முதலமைச்சர் அவர்களால் இன்று
தொடங்கப்பட்டுள்ள இக்கல்லூரியில் 7 வகுப்பறைகள், 2 கணினி ஆய்வகம்,
1
நூலகம், கல்லூரி முதல்வர்
நிர்வாக அறை, பேராசிரியர், பணியாளர்கள் அறை உள்ளிட்ட
வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த
ஆண்டு அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல்
கல்லூரியில் சேரும் அனைத்து
மாணவ, மாணவியர்களின் கல்விக்
கட்டணம், கல்வி உபகரணங்கள் அனைத்தும் முதலமைச்சர் அவர்களின்
ஏற்பாட்டின்படி இலவசமாக
வழங்கப்படும்.

மேலும்,
நாமக்கல் மாவட்டம்திருச்செங்கோடு, திண்டுக்கல் மாவட்டம்தொப்பம்பட்டி, தூத்துக்குடி மாவட்டம்
விளாத்திகுளம் ஆகிய
மூன்று கல்லூரிகளுக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களின் அனுமதி
பெறப்பட்டு தற்காலிகமாக இயங்குவதற்கு கட்டடம் தேர்வு செய்யப்பட்டு, மாணவ, மாணவியர் சேர்க்கை
நடைபெற்று வருகிறது. மீதமுள்ள
6
கலை மற்றும் அறிவியல்
கல்லூரிகள் அடுத்த கல்வியாண்டில் தொடங்கிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!