9ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஆண்டுதோறும் ரூ, 1000 உதவித்தொகை பெற நவம்பர் 20ம் தேதிக்குள்ளாக தலைமை ஆசிரியர்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்!
ஊரகப்பகுதிகளைச் சேர்ந்த அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டில் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் http://dge.tn.gov.in என்ற இளையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மாவட்ட தோறும் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 மாணவ மாணவியருக்கு 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை இத்தொகை வழங்கப்படும்.