மாணவர்கள் பள்ளிக்கு
வருவது கட்டாயமில்லை – பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
திருச்சியில் அவர் அளித்த பேட்டி:
நவ.,
1ல் ஒன்று முதல்
எட்டாம் வகுப்பு வரை
பள்ளிகள திறந்தாலும், மாணவர்கள்
கண்டிப்பாக பள்ளிக்கு வர
வேண்டிய கட்டாயம் இல்லை.
முடிந்தவர்கள் வரலாம்.
தீபாவளி முடிந்த பின்
கூட வரலாம்; வராவிட்டாலும் பரவாயில்லை.
NEET தேர்வு
எதிர்ப்பு தொடர்பாக, முதல்வர்,
தி.மு.க.,
– எம்.பி.,க்கள்
மூலம், 12 மாநில முதல்வர்களை அணுகி உள்ளோம். அவர்களிடம் நீட் தேர்வு ரத்து
தொடர்பாக எங்களின் கருத்துக்கள் எடுத்து கூறப்பட்டுள்ளன. அதற்கு
அவர்களின் கருத்து இனிதான்
வரும். தமிழகத்தில் அரசு
மற்றும் உதவி பெறும்
பள்ளிகளில் கூடுதலாக, 2.5 லட்சம்
மாணவர்கள் இந்த கல்வியாண்டு சேர்ந்துள்ளனர்.வகுப்பறை
பற்றாக்குறையை போக்க,
இரண்டு நாட்களுக்கு ஒருமுறை
என, சுழற்சி முறையில்
மாணவர்களுக்கு வகுப்புகள் நடக்கும். மாணவர்கள் பள்ளிக்கு
வர போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.