தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் மாணவர்
சேர்க்கை
கோவை
மாவட்டத்தில் உள்ள
சிறுபான்மையற்ற, தனியார்,
சுயநிதி பள்ளிகளில், 25 சதவீத
இடஒதுக்கீட்டின் கீழ்
மாணவர் சேர்க்கைக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என,
மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோவை கலெக்டர் சமீரன் அறிக்கை:
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய
கல்வி உரிமை சட்டம்,
2009ன் படி அனைத்து
சிறுபான்மையற்ற, தனியார்,
சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு
மறுக்கப்பட்ட மற்றும்
நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவுநிலை வகுப்புகளில் குறைந்தபட்சம், 25 சதவீத ஒதுக்கீட்டின்படி சேர்க்கை
வழங்கப்பட வேண்டும். நடப்பு
கல்வியாண்டுக்கான மாணவர்
சேர்க்கைக்கு இணையவழியில் வரும், 20 முதல் மே,
18ம் தேதி வரை
விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு
குழந்தைகளுக்கான இலவச
மற்றும் கட்டாய கல்வி
உரிமை விதிகள், 2011ன்
படி எல்.கே.ஜி.,
அல்லது முதல் வகுப்புக்கு அருகாமையிடம் என்பது
ஒரு கி.மீ.,
ஆகும். சேர்க்கை கோரும்
குழந்தைகளின் பெற்றோர்
பள்ளி கல்வித்துறையின் இணைய
வழியாக விண்ணப்பிக்கலாம். அந்தந்த
பள்ளிகளில்விண்ணப்பங்கள் ஏதேனும்
பெறப்பட்டால் பெற்றோருக்கு ஒப்புகை சீட்டு தவறாமல்
வழங்க வேண்டும். இவ்விண்ணப்பங்களை பள்ளியிலேயே இணையவழியில் பதிவேற்றம் செய்யலாம்.
பெற்றோர்
முதன்மை கல்வி அலுவலகம்,
மாவட்ட கல்வி அலுவலகங்கள், வட்டார கல்வி அலுவலகங்கள், அனைவருக்கும் கல்வி
இயக்க வட்டார வளமைய
அலுவலகங்களிலும் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இணைய
வழியில் விண்ணப்பிக்கலாம். நிர்ணயிக்கப்பட்ட இடங்களைவிட அதிகமான
விண்ணப்பங்கள் பெறப்பட்டால் குலுக்கல் முறையில் தேர்வு
செய்யப்படும். விண்ணப்பிக்கும்போது புகைப்படம், பிறப்பு
சான்று அல்லது பிறப்பு
சான்றிதழுக்கான பிற
ஆவணம், இருப்பிடம், வருமான
சான்று(ஆண்டு வருமானம்,
2 லட்சம் ரூபாய்க்கு கீழ்
உள்ளோர்), வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரில் முன்னுரிமை கோரும்
நபர்கள் உரிய அலுவலரிடம் பெறப்பட்ட நிரந்தர ஆவணங்களின் நகல், ஜாதி சான்றிதழ்
உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற
வேண்டும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


