HomeBlogதமிழக சைனிக் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை – துவக்க நிலை பட்டியல் வெளியீடு

தமிழக சைனிக் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை – துவக்க நிலை பட்டியல் வெளியீடு

 

தமிழக சைனிக் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைதுவக்க நிலை பட்டியல் வெளியீடு

நாடு முழுவதும் 26 சைனிக் பள்ளிகள் உள்ளன. தமிழகத்தில் உள்ள சைனிக் பள்ளியில் நுழைவுத் தேர்வு மூலமாக மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

இந்தாண்டுக்கான மாணவர் சேர்க்கை வழங்க நுழைவுத் தேர்வு பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி 6 மையங்களில் நடத்தப்பட்டது. இந்த தேர்வில் ஆறாம் வகுப்பு மாணவர்கள் 2,200 பேரும், ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் 1,100 பேரும் கலந்து கொண்டனர்.

இந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் துவக்க நிலை அழைப்பு பட்டியல் அந்தந்த சைனிக் பள்ளி இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியல் துவக்க நிலை அழைப்பாணை, வகுப்பு மற்றும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், பதிவெண்களின், வரிசை முறைப்படி இருக்கும். இந்த பட்டியலில் ஒரு இடத்தில் மூன்று பேர் என்ற அடிப்படையில் இந்த பட்டியல் இருக்கும்.

இந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பவர்கள் சைனிக் பள்ளிகளில் சேர மருத்துவ பரிசோதனைக்கு செல்ல வேண்டும். இது குறித்த கூடுதல் விவரங்களை இந்த பள்ளியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இந்த பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கான இறுதி தரவரிசை பட்டியல் மே மாதத்தில் வெளியிடப்படும். மருத்துவ பரிசோதனை முடிந்து அதன் முடிவுகள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை பட்டியல் இருக்கும் என அமராவதி சைனிக் பள்ளி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular