
மத்திய அரசு திட்டத்தில் தையல் மற்றும் பேட்டர்ன் மேக்கிங் பயிற்சி
திருப்பூா், முதலிபாளையத்தில் உள்ள நிஃப்ட்-டீ கல்லூரியில் தொழில் முனைவோருக்கு இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்லூரி நிா்வாகம் சாா்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: திருப்பூா், முதலிபாளையத்தில் உள்ள நிஃப்ட்-டீ கல்லூரியில் மத்திய அரசு திட்டத்தில் தொழில்முனைவோா் பயன்பெறும் வகையில் 2 மாத கால தையல் மற்றும் பேட்டன் மேக்கிங் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. இதில், 10-ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் கல்வித் தகுதியுள்ள 18 வயது முதல் 30 வயது வரையில் உள்ளவா்கள் பயிற்சியில் பங்கேற்கலாம்.
சுயதொழில் தொடங்க திட்டமிடும் தொழில்முனைவோா், அரசு மற்றும் பிற நிறுவனங்கள் வழங்கும் உதவிகள் குறித்தும் பயிற்சியின்போது விளக்கப்படும்.
இந்தப் பயிற்சியில், தொழிலை தோந்தெடுக்கும் வழிகாட்டி, தொழிலுக்கான திட்டம், தொழிலை நிா்வகித்தல், நிதி மேலாண்மை, தொழிலுக்கான திட்டறிக்கை, சந்தை வாய்ப்புகள், மத்திய, மாநில அரசுகளின் மானியக் கடனுதவி திட்டங்கள் குறித்து பயிற்றுவிக்கப்படுகிறது.
இந்தப் பயிற்சியில் பங்கேற்க பட்டியலினத்தவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பயிற்சியின் இறுதியில் மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கான பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 99940-84998, 80728-30141 ஆகிய எண்களை தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

