பால் உற்பத்தியாளர்கள் பயன்பெறும் வகையில்
ஆண்டு முழுவதும் பால்
கொள்முதல் செய்ய நடவடிக்கை
எடுக்கப்படும்
பால்
உற்பத்தியாளர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டு முழுவதும்
பால் கொள்முதல் செய்ய
நடவடிக்கை எடுக்கப்படும் என
பால்வளத்துறை அறிவித்துள்ளது
இது குறித்து பால்வளத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது;
தமிழக
முதல்வர் உத்தரவின் பேரில்
மக்களின் தேவையறிந்து துறைதோறும் ஆய்வு செய்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில் பால்வளத்துறை அமைச்சர் உத்தரவுப்படி, பால்
உற்பத்தியாளர்களான விவசாயிகளின் நலன் காக்கும் வகையில்
ஆண்டு முழுவதும் (365 நாட்கள்)
கொள்முதல் செய்த பாலை
வாங்க அறிவுறுத்தப்படுகிறது.
தமிழகத்திலுள்ள பால் உற்பத்தியாளர்களின் கூட்டுறவு
சங்கத்தில் உறுப்பினராக உள்ள
அனைத்து உறுப்பினர்களின், கறவை
மாடுகள் மூலம் கிடைக்கும் பாலினை, எவ்வித மறுப்பும்
தயக்கமும் காட்டாமல், அரசு
நிர்ணயித்த தரத்தின் அடிப்படையில், எவ்வித தங்குதடையுமின்றி பாலினை
கொள்முதல் செய்ய அந்தந்தப்
பகுதி கூட்டுறவு சங்கங்களின் பொது மேலாளர்கள், துணைப்பதிவாளர்கள் (பால்வளம்) ஆகியோருக்கு அறிவுறுத்தப்படுவதுடன், மேலும்
இது தொடர்பாக பால்
உற்பத்தியாளர்கள் / விவசாயப்
பெருமக்களின் கவனத்திற்கு துண்டு பிரசுரங்கள் மூலம்
விளம்பரம் செய்வதுடன், அரசு
நிர்ணயித்த தரத்தில் பாலினை
ஆண்டு முழுவமும் அந்தந்தப்
பகுதி கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கி அதற்குரிய பயன்களை
பெற்று மகிழ்ச்சியடையுமாறு விவசாயிகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


