TAMIL MIXER EDUCATION- ன் விவசாய செய்திகள்
மலை மண்ணில்
ஸ்டார் செர்ரி சாகுபடி
இயற்கை
விவசாயத்தில், குளிர்
பிரதேசங்களில் விளையும்
பல வித பழங்களை
சாகுபடி செய்து வருகிறார் திருவள்ளூர் மாவட்டம்,
ஸ்ரீகாளிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த எம்.ராஜிவ்
காந்தி.
அந்த
வரிசையில், மலை மண்
நிலத்தில், ஸ்டார் செர்ரி
ரக பழத்தை, வரப்பு
பயிராக சாகுபடி செய்துள்ளார்.
இந்த
செடி நட்டு, இரண்டு
ஆண்டுகளுக்கு பின்,
மகசூலுக்கு வரும்போது, கொத்து
கொத்தாக பழுக்கும் போது
செடிகள் வண்ண நிறங்களில் ஜொலிக்கும்.இந்த பழத்தில்
நீர் சத்து; பலவித
வைட்டமின் சத்து கிடைக்கும்.
ஒரு
ஸ்டார் செர்ரி ரக
செடியை நட்டால், புதர்
போல் வந்து விடும்
என, முன்னோடி விவசாயிகள் கூறி செடிகளை கொடுத்து
உள்ளனர்.
ஒரு
சில செடிகளை இவர் நட்டுள்ளார். இன்னும்
மகசூல் எடுக்கவில்லை. மகசூல்
மற்றும் சந்தை நிலவரத்தை
பொறுத்து, செடிகளை கூடுதலாக
நட்டு சாகுபடி பரப்பு
விரிவுபடுத்த உள்ளாராம்.
தொடர்புக்கு: எம்.ராஜிவ்
காந்தி 89402 22567.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


