SSC 2024 தேர்வு தேதியில் மாற்றம்!
அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) என்பது போட்டித் தேர்வுகள் மூலம் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை பூர்த்தி செய்ய கூடிய அரசு நிறுவனமாகும். இத்தகைய தேர்வாணையத்தின் மூலம் இவ்வாண்டு நடத்தப்பட இருந்த தேர்வுகளின் பட்டியலானது முன்னதாகவே https://ssc.gov.in/ என்ற வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டு இருந்தது. இத்தகைய தேர்வு பட்டியலானது ஏப்ரல் 19 முதல் ஜூன் 1ம் தேதி வரை நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலின் காரணமாக தற்சமயம் மாற்றப்பட்டுள்ளது. இவ்வாறு மாற்றப்பட்ட SSC-யின் தேர்வு பட்டியலானது இன்று (ஏப்ரல் 08) வெளியிடப்பட்டுள்ளது.
இப்பட்டியலின் படி, SSC JE 2024 Paper I தேர்வானது 2024 ஜூன் 4, 5, 6ம் தேதிகளில் இருந்து 2024 ஜூன் 5, 6, 7ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனை போலவே SSC Selection Post Examination 2024 (Phase XII) தேர்வானது 2024 மே 6, 7, 8ம் தேதிகளில் இருந்து 2024 ஜூன் 24, 25, 26ம் தேதிக்கும், SSC SI 2024 (Paper I) தேர்வானது 2024 மே 9, 10, 13ம் தேதிகளில் இருந்து 2024 ஜூன் 27, 28, 29ம் தேதிக்கும், SSC CHS 2024 (Paper I) தேர்வானது 2024 ஜூலை 1ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இத்தேர்வு குறித்த கூடுதல் தகவல்களை தேர்வர்கள் https://ssc.gov.in/ என்ற வலைதள பக்கத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
Revised SSC 2024 Exam Schedule PDF
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow