Join Whatsapp Group

Join Telegram Group

Private Jobs

Government Jobs

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு ஸ்பின்னிங் மற்றும் தொழில்நுட்ப ஜவுளிப் பயிற்சி: திருப்பூா்

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு ஸ்பின்னிங் மற்றும் தொழில்நுட்ப ஜவுளிப் பயிற்சி: திருப்பூா்
வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு ஸ்பின்னிங் மற்றும் தொழில்நுட்ப ஜவுளிப் பயிற்சி: திருப்பூா்

திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் ஸ்பின்னிங் மற்றும் தொழில்நுட்ப ஜவுளிப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு துணிநூல் துறை, திறன் மேம்பாட்டுக் கழகத்தின் வழிகாட்டுதலின்படி தென்னிந்திய பயிற்சி மற்றும் ஆராய்ச்சி சங்கத்தின் (SITRA) மூலமாக பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்த வேலை வாய்ப்பற்ற இளைஞா்களுக்கு (ஆண்/பெண்) ஸ்பின்னிங் மற்றும் தொழில்நுட்ப ஜவுளிப் பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இந்தப் பயிற்சியில் சேர இணையதள முகவரியில் தங்களது விவரங்களைப் பதிவு செய்துகொள்ளலாம். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், 5 ஆவது தளம், அறை எண் 502 இல் உள்ள ஜவுளித் துறை துணை இயக்குநா் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04212220095 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

Leave a Comment