சிவகங்கையில் கல்லூரி
மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்
போட்டி
சிவகங்கையில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி
பிறந்த தினத்தை முன்னிட்டு வரும் ஜூன் 3 ஆம்
தேதி கல்லூரி மாணவ,
மாணவிகளுக்கான பேச்சுப்
போட்டி நடைபெற உள்ளதாக
ஆட்சியா் பி.மதுசூதன்
ரெட்டி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சிவகங்கை
மன்னா் துரைச்சிங்கம் அரசுக்
கலைக் கல்லூரியில் வரும்
ஜூன் 3 ஆம் தேதி
முற்பகல் 9.30 மணியளவில் பேச்சுப்
போட்டி நடைபெற உள்ளது.
மாவட்ட அளவில் நடைபெற
உள்ள இப்போட்டியில் வெற்றி
பெறும் கல்லூரி மாணவ,
மாணவிகளுக்கு முதல்
பரிசாக ரூ.5,000, இரண்டாம்
பரிசாக ரூ.3,000, மூன்றாம்
பரிசாக ரூ.2,000 மற்றும்
பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட
உள்ளன.
சிவகங்கை
மாவட்டத்தில் செயற்பட்டு வரும் அனைத்து தனியார்
மற்றும் அரசுக் கல்லூரிகளில் (கலைக்கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள், செவிலியா் பயிற்சிக் கல்லூரிகள், தொழிற் பயிற்சி நிலையங்கள், மருத்துவக் கல்லூரிகள் மற்றும்
பிற கல்லூரிகள்) பயிலும்
மாணவ, மாணவிகள் மட்டுமே
இப்பேச்சுப் போட்டியில் பங்கேற்க
முடியும். ஒரு கல்லூரியிலிருந்து இருவா் மட்டுமே
பங்கேற்க முடியும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


