ஸ்மார்ட் ரேஷன்
கார்டு பெற சிறப்பு
முகாம்
– ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை
ஸ்மார்ட் ரேஷன் கார்டு
பெறாத 18 வயது பூர்த்தி அடைந்த திருநங்கை, பட்டியல் இனத்தவர்கள், மலைவாழ் பழங்குடியினர், நரிக்குறவர்,மாற்றுத் திறனாளிகள், கைம்பெண்,
கணவனால் கைவிடப்பட்டோர் இணையம்
மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மாதந்தோறும் 2வது சனி அன்று
காலை
10.00
மணி முதல் மதியம்
1.00 மணி வரை, அந்தந்த
தாலுகாவில் வட்ட வழங்கல்அலுவலகங்களில் சிறப்பு முகாம்
நடக்கிறது. இதில், ஆதார்
அட்டை, வாக்காளர் அடையாள
அட்டை, முகவரிக்கான ஆதாரம்,
எரிவாயு ரசீது அல்லது
வீட்டு வாடகை ஒப்பந்தப்
பத்திரம், போட்டோ, அலைபேசி
எண் வழங்கப்படவேண்டும்.திருநங்கைகள் பெயர், அவரது பெற்றோர்
அல்லது காப்பாளர், குடும்பஅட்டையில் இடம் பெற்றிருந்தால் பெயரை நீக்கம் செய்ய
மனுதார் சுய உறுதி
மொழிபத்திரம் அளிக்க
வேண்டும்.
மேலும்
விபரங்களுக்கு அருகேயுள்ள தாசில்தார்அலுவலகத்தில் வட்டவழங்கல் அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம்.