கிசான் கடன்
அட்டை பெற 24ம்
தேதி சிறப்பு முகாம் – புதுச்சேரி
விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டை
வழங்குவதற்கான சிறப்பு
முகாம், 24ம் தேதி
துவங்குகிறது.
இதுகுறித்து மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டத்தில் தகுதியுள்ள விவசாயிகள் பயிர்
கடன், கால்நடை மற்றும்
மீன் வளர்ப்பு பணிகளுக்கு கடன் பெற மத்திய
அரசு வழிகாட்டுதலின்படி ‘கிசான்
கடன் அட்டை‘ வழங்கப்பட
உள்ளது.
இதற்கான
சிறப்பு முகாம், வரும்
24ம் தேதி முதல்
மே 1ம் தேதி
வரை நடைபெற உள்ளது.
இதன் தொடக்க விழா,
தேர்ந்தெடுக்கப்பட்ட வருவாய்
கிராமங்களில் கிராம
சபா மூலம் வரும்
24ம் தேதி முகாம்
நடத்தப்பட உள்ளது. விருப்பமுள்ள விவசாயிகள் முகாமில் உரிய
ஆவணங்களுடன் பங்கேற்று, கடன்
அட்டை பெற விண்ணப்பிக்கலாம்.
மேலும்,
கிராமங்களில் உள்ள
பொது சேவை மையங்கள்
மூலமாகவும் விவசாயிகள் கிசான்
கடன் அட்டை பெற
விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி
செய்த விண்ணப்பங்களை உரிய
ஆவணங்களுடன் (நில ஆவணங்கள்,
பட்டா, சிட்டா, அடங்கல்,
ஆதார் அட்டை) வங்கி
மற்றும் கூட்டுறவு வங்கிகளில் சமர்ப்பித்து எவ்வித
பிணையும் இன்றி ரூ.1.60
லட்சம் வரை கடன்
பெற்றுக் கொள்ளலாம்.