ஆதார் எண்ணை
பி.எம். கிஷான்
இணையதளத்தில் பதிவு
செய்ய
அழைப்பு
– ஊட்டி
ஆதார்
எண்ணை ‘பி.எம்.
கிஷான்‘ இணையதளத்தில் பதிவு
செய்து, வங்கி கணக்குடன்
இணைத்து பயன்பெற வேண்டும்
என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கலெக்டர் அம்ரித் அறிக்கை:
மத்திய
அரசு விவசாயிகளின் நலன்
கருதி, ‘பிரதம மந்திரி
கிசான் சம்மன்‘ நிதி
திட்டத்தின் கீழ், சிறு
குறு விவசாயிகள் ‘பி.எம்.,
கிஷான்‘ இணையதளத்தில் பதிவு
செய்துள்ளது.
அதில்,
ஆதார், வங்கி விபரங்கள்
மற்றும் நில விபரங்களை
பதிவேற்றம் செய்த பின்பு
ஆண்டு ஒன்றுக்கு, 6,000 ரூபாய்
மூன்று தவணைகளாக வழங்கி
வருகிறது.இத்திட்டத்தில் விவசாயிகளின் வங்கி கணக்கினை அடிப்படையாக கொண்டு நிதி அளிக்கப்பட்டு வந்த நிலையில், ‘நடப்பாண்டு முதல் பதியப்பட்ட விவசாயிகள் ஆதார் எண்ணினை அடிப்படையாக கொண்டு தவணை நிதி
வழங்கப்படும்,’ என,
கூறப்பட்டுள்ளது.
எனவே,
பிரதம மந்திரி கிசான்
சம்மன் நிதி திட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகள் அனைவரும், தங்களின் ஆதார்
எண்ணினை ‘பி.எம்.
கிஷான்‘ இணையதளத்தில் பதிவு
செய்து வங்கி கணக்குடன்
இணைத்து பயன்பெற வேண்டும்.