Home Blog 70% மானியத்தில் சூரிய மின்சக்தி பம்புசெட் – விவசாயிகளுக்கு வேளாண்துறை எச்சரிக்கை

70% மானியத்தில் சூரிய மின்சக்தி பம்புசெட் – விவசாயிகளுக்கு வேளாண்துறை எச்சரிக்கை

0

Solar Pumpset at 70% Subsidy - Agricultural Warning to Farmers

70% மானியத்தில் சூரிய
மின்சக்தி பம்புசெட்விவசாயிகளுக்கு வேளாண்துறை எச்சரிக்கை

சூரிய
மின்சக்தியால் இயங்கும்
பம்பு செட் அமைக்கும்
திட்டத்தில் பதிவு செய்ய
விரும்புபவா்கள் தனிப்பட்ட
தகவல்களைப் பகிரும் முன்
சம்பந்தப்பட்ட இணையதளத்தின் நம்பகத்தன்மையை உறுதி
செய்யுமாறு, விவசாயிகளை வேளாண்
துறை எச்சரித்துள்ளது.

இது
தொடா்பாக வேளாண் துறை
வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மத்திய, மாநில அரசுகளின்
நிதியுதவின் கீழ் 70 சதவீத
மானியத்தில் விவசாயிகளுக்கு மின்
கட்டமைப்புடன் சாராமல்
தனித்து சூரிய சக்தியால்
இயங்கும் 10 குதிரைத் திறன்
வரையிலான பம்பு செட்டுகள்
அமைத்து தரப்படுகின்றன. இந்தத்
திட்டத்தில் பதிவு செய்வதற்கான போர்ட்டல்  வலைதளங்கள் என்று
பொய்யான சில மோசடி
இணையதளங்கள், திட்டத்தில் ஆா்வமுள்ளவா்களிடமிருந்து பணம், தகவல்களைச் சேகரிப்பது தெரிய வந்துள்ளது.

இந்தத்
திட்டத்துக்கென எந்தவொரு
பதிவுக் கட்டணத்தையும் செலுத்தவோ,
பொய்யான வலைதளங்களில் தனிப்பட்ட
தகவல்களை பகிரவோ வேண்டாம்.

இந்தத்
திட்டம் தொடா்பான மோசடி
இணையதளங்கள் குறித்து புகார்கள்
வரப்பெற்றவுடன் தவறான
நபா்கள் மீது நடவடிக்கை
எடுக்கப்பட்டது. பல
போலி பதிவு இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தில் ஆா்வமுள்ளவா்கள் எந்தவொரு
தகவலையும் வழங்குவதற்கு முன்
இணையதளத்தின் நம்பகத்தன்மையை சரிபார்க்க வேண்டும். இத்திட்டத்துக்கான பதிவு போர்ட்டல் எனக் கூறி,
வாட்ஸ் ஆப், குறுஞ்செய்தி மூலம் பகிரப்படும் சந்தேகத்துக்குரிய இணையதளத்துக்கான லிங்க்கை
கிளிக் செய்ய வேண்டாம்.

புதிய
மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி
அமைச்சகத்தின் இணையதளம் https://mnre.gov.in/ மற்றும் மாநில அரசின்
இணையதளம் மூலம் மட்டுமே
பதிவு மற்றும் திட்டம்
பற்றிய தகவல்களுக்கு அணுக
வேண்டும்.

மேலும்
விவரங்களுக்கு, 1800 180 3333
என்ற இலவச தொடா்பு
எண்ணை அணுகலாம்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version