மகசூல் குறைவதை
தவிர்க்க மண் பரிசோதனை
அவசியம்
மாவட்ட
விவசாயிகள்
மண்வளத்தை பரிசோதனை செய்வதன்
மூலம், உரச்செலவை குறைத்து,
அதிக மகசூல் பெறலாம்
என வேளாண் இணை
இயக்குனர் டாம்.பி.
சைலேஸ் வலியுறுத்தி உள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் பரமக்குடியில் உள்ள மண் பரிசோதனை
நிலையத்தில் தங்கள், விளை
நிலத்தின்மண் மாதிரிகளை
கொடுத்து ஆய்வு முடிவு
மற்றும் விபரங்கள் அடங்கிய
மண்வள அட்டை பெறலாம்.
இதன் மூலம் மண்ணில் உள்ள தழை,
மணி, சாம்பல் சத்துக்களின் அளவை அறியலாம்.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
மேலும்
பயிர்களுக்குத் தேவையான
அளவில் களர், அமில,
உவர் மற்றும்சுண்ணாம்பு தன்மைகளை
தக்க சீர்திருத்தம் செய்யமுடியும். தேவைக்கேற்ப உரமிடுவதால் உரச்செலவை
மிச்சப்படுத்தலாம். ஒரு
மண் மாதிரிக்கு ஆய்வுக் கட்டணமாக ரூ.20
செலுத்த வேண்டும்.
நிலத்தின்
வளத்தை பெருக்கிட மண்
பரிசோதனை செய்து அளவறிந்து
உரமிட்டு செலவினை குறைத்து
அதிகலாபம் பெறலாம்.