மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட்
கார்டு
மாற்றுத்திறனாளிகளுக்கு, தேசிய அடையாள
ஸ்மார்ட் கார்டு வழங்க,
உடுமலையில் சிறப்பு முகாம்
நடத்தப்படும் என,
தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய
அடையாள அட்டை வைத்துள்ள
மாற்றுத்திறனாளிகளுக்கு, ஸ்மார்ட்
கார்டு வழங்கப்படவுள்ளது.
இதற்காக
சிறப்பு முகாம் மாவட்டம்
முழுவதும் நடத்தப்படுகிறது.
அவ்வகையில், வரும் 12ம் தேதி,
உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலுகா அலுவலகம்; 17ம்
தேதி, தாராபுரம் தாலுகா
அலுவலகங்களில், காலை,
10 முதல் மதியம், 2 மணி
வரை சிறப்பும் முகாம்
நடைபெறுகிறது.மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள
அட்டை பெற்றுள்ள அனைத்து
வகை மாற்றுத்திறனாளிகளும், தேசிய
அடையாள ஸ்மார்ட் கார்டு
பெறுவது அவசியமாகும்.
இந்த
அட்டையை ஆதாரமாகக்கொண்டு, அரசின்
நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட
உள்ளது.இந்த ஸ்மார்ட்
கார்டை, இணையதளத்தில் பதிவு
செய்ய ஏதுவாக, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள
அட்டை, ரேஷன்கார்டு, ஆதார்,
இரு போட்டோ ஆகியவற்றுடன் முகாமில் பங்கேற்று, விண்ணப்பிக்க வேண்டும்.இந்த வாய்ப்பை
மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


