HomeBlogபுதிய நடைமுறையில் வேலை வாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு திறன் பயிற்சி

புதிய நடைமுறையில் வேலை வாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு திறன் பயிற்சி

 

புதிய நடைமுறையில் வேலை வாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு திறன் பயிற்சி

புதுச்சேரியில் வேலை வாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு திறன்பயிற்சி அளிப்பதற்கான விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. அதற்காக,
19-
ம் தேதிக்குள் தொழிலாளர்
துறை இணையதளத்தில் தங்கள்
பெயரை பதிவு செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி தொழிலாளர் துறை செயலர் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக இயக்குநர் வெளியிட்டிருக்கும்
செய்திக் குறிப்பு:

புதுச்சேரி அரசு தொழிலாளர் துறை
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த நபர்களின்
படிப்பு மற்றும் இதர
தகுதிகளின் அடிப்படையில் அவர்களுக்கு மேலும் திறன் பயிற்சி
தேவைப்படும் துறைகள் குறித்த
விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

இத்தகவல்களை பெற்று, தனியார் நிறுவனங்களின் தேவைக்கேற்ப வேலை வாய்பில்லாத இளைஞர்களின் தகுதியினை மேலும்
உயர்த்தி அவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்பதே இதன்
நோக்கமாகும்.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு
செய்துள்ள நபர்கள், 18 முதல்
35
வயதுக்குட்பட்ட விருப்பம்
உள்ளவர்கள் தொழிலாளர் துறை
இணைய தளத்தில் (http://labour.py.gov.in/) கொடுக்கப்பட்டுள்ள தொடர்பில் உள்ள
விண்ணப்பம் மூலமாக தங்கள்
பெயரை பதிவு செய்துகொள்ளலாம்.

19-ம்
தேதி மாலை 5 மணி
வரை உங்கள் விண்ணப்பம் இணையதளம் மூலம் பெறப்படும். விவரங்கள் அறிய 0413-2274672 என்ற
எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular