ஓவிய ஆா்முள்ள
மாணவா்களுக்கு திறன்
ஊக்கப் பயிற்சி
ஓவியத்தில் ஆா்முள்ள பள்ளி மாணா்களுக்காக திறன் ஊக்கப் பயிற்சி
முகாம் வேலூா் கோட்டையிலுள்ள அரசு அருங்காட்சியகத்தில் வருகிற
18ம் தேதி நடைபெற
உள்ளது.
இதுகுறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சா்வதேச
அருங்காட்சியக தினத்தையொட்டி, வேலூா் அரசு அருங்காட்சியகம் சார்பில் 6 முதல் 9ம்
வகுப்பு வரை பயிலும்
மாணவா்களுக்கு ஒரு
நாள் திறன் ஊக்கப்
பயிற்சி முகாம் வேலூா்
கோட்டையில் உள்ள அரசு
அருங்காட்சியகத்தில் 18ம்
தேதி நடத்தப்பட உள்ளது.
பள்ளி
மாணவா்களின் கலைத் திறனை
ஊக்குவிக்கும் வகையில்
நடைபெற உள்ள இந்தப்
பயிற்சி முகாமில் மாணவா்களுக்கு அடிப்படை ஓவியம், வண்ண
ஓவியம், ஓவியங்களின் வகைகள்,
பயனற்ற பொருட்களைக் கலைப்
பொருட்களாக மாற்றுதல், வாழ்த்து
அட்டை தயாரித்தல் உள்ளிட்ட
திறன் ஊக்கப் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.
ஓவியத்தில் ஆா்வமுள்ள 6 முதல் 9ம்
வகுப்பு வரை பயிலும்,
மாணவ மாணவிர்கள் வருகிற
17ம் தேதிக்குள் தங்களது
பெயரை வேலூா் அரசு
அருங்காட்சியகத்தில் பதிவு
செய்து கொள்ள வேண்டும்.
பெயரைப் பதிவு செய்த
மாணவா்கள் மட்டுமே பயிற்சி
முகாமில் பங்கேற்க அனுமதிக்கப்படுவா்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


