ரூ.60,000 ஊக்கத்தொகையுடன் திறன் மேம்பாட்டு பயிற்சி
திறன்
மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் ஒன்பது இந்திய
தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து
மகாத்மா காந்தி தேசிய
கூட்டுறவு பயிற்சியை இன்று
அறிமுகம் செய்துள்ளது. இந்த
திட்டத்தின் மூலம் மாணவர்கள்
வருடத்திற்கு ரூ.60,000
வரை உதவித் தொகையினை பெறலாம்.
தேசிய
திறன் மேமன்பாடு மற்றும்
தொழிமுனைவோர் அமைச்சகம்
இந்திய தொழில்நுட்ப நிறுவங்களுடன் இணைந்து மகாத்மா காந்தி
தேசிய கூட்டுறவு பயிற்சியை
இன்று முதல் தொடங்கியுள்ளது. இந்த திறன் மேம்பாட்டு பயிற்சியில் படிக்கும் மாணவர்களுக்கு முதலாம் ஆண்டில் ரூ.50,000
கல்வி உதவி தொகையும்,
இரண்டாம் ஆண்டில் ரூ.60,000
கல்வி உதவி தொகையும்
வழங்கப்படுகிறது. கூட்டுறவு
பயிற்சி இந்தியாவில் உள்ள
இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் நடக்கும்.
பயிற்சியாளர்களுக்கான உதவித்தொகையானது உலக
வங்கியில் சங்கல்ப் திட்டம்
(திறன்கள் கையகப்படுத்தல் மற்றும்
வாழ்வாதார மேம்பாட்டிற்கான அறிவு
விழிப்புணர்வு) மூலம்
வழங்கப்படுகிறது. ஐ.ஐ.எம்.களில்
பயிற்சி பெற்ற பின்னர்
பயிற்சியாளர்களுக்கு மாவட்ட
திறன் நிர்வாகம் மற்றும்
மாவட்ட திறன் குழுக்கள்
மூலம் மேலும் பயிற்சியளிக்கப்படும்.
மத்திய
திறன் மேம்பாடு மற்றும்
தொழில்முனைவோர் அமைச்சர்
டாக்டர் மகேந்திர நாத்
பாண்டே அவர்கள், திறன்
இந்தியா திட்டத்தின் மூலம்
கடந்த ஆறு ஆண்டுகளில் திறன் மேம்பாடு மற்றும்
நாடு முழுவதும் தொழில்
பயிற்சிக்கான உள்கட்டமைப்பு மேம்பட்டுள்ளது.