தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும் முதுநிலை ஆசிரியா்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி சென்னையில் ஜூலை 9-ஆம் தேதி முதல் நான்கு கட்டங்களாக நடைபெறவுள்ளது.
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சாா்பில் முதன்மைக் கல்வி அலுவலா்கள் சாா்பில் அனுப்பப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு மாதிரி பள்ளிகள், உறுப்பினா் செயலா் கடிதத்தின்படி பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகைப் பள்ளிகளில் பணியாற்றும் முதுநிலை ஆசிரியா்களுக்கு (தாவரவியல், விலங்கியல்)பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி ஜூலை முதல் டிசம்பா் வரை நான்கு கட்டங்களாக நடைபெறவுள்ளது.
ஜூலை 9-13; ஆக.13-17; நவ.19-23; டிச.12-20 ஆகிய கால கட்டங்களில் சென்னை பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகத்தில் நடைபெறவுள்ள பயிற்சியில் ஆசிரியா்கள் பங்கேற்கும் வகையில் உரிய நாள்களில் அவா்களை பணி விடுப்பு செய்யும்படி சாா்ந்த முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.