நிலமில்லாத விவசாய
தொழிலாளர்களுக்கு திறன்
மேம்பாட்டு
பயிற்சி
திருவள்ளூர் மாவட்ட
தோட்டக்கலைத் துறை
வாயிலாக, பூங்கொத்து மற்றும்
பூ அலங்காரம் செய்தல்;
நுண்ணீர் பாசன அமைப்பு
நிறுவுதல் மற்றும் பராமரிப்பு செய்தல்; தேனீ வளர்ப்பு
தொழில்நுட்பம் ஆகிய
தலைப்புகளை உள்ளடக்கிய பயிற்சி,
ஈக்காடு கண்டிகை, அரசு
தோட்டக்கலைப் பண்ணையில்
இலவசமாக வழங்கப்படுகிறது.
இங்கு,
30 நாட்களுக்கு, 40 நிலமில்லாத விவசாய
தொழிலாளர்களை தேர்வு
செய்து பயிற்சியளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.விண்ணப்ப படிவம்,
இத்துறையின் www.tnhorticulture.tn.gov.in என்ற
இணையதளத்தில் இடம்
பெற்றுள்ளது.
பயிற்சியில் பங்கேற்க ஆர்வம் உள்ளவர்கள், விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து தோட்டக்கலை துணை
இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.