மாணவர்களின் ஆளுமைத்திறனை வளர்க்க திறனறிப் போட்டிகள்
மத்திய
திட்ட ஏற்பளிப்புக்குழு கூட்ட
நடவடிக்கை ஒப்புதலின் Quality
Intervention (Secondary) என்ற தலைப்பின் கீழ்
அரசு பள்ளிகளில் இடைநிலை
வகுப்புகளில் பயிலும்
மாணவர்களின் முழு ஆளுமைத்திறனை வளர்க்க நடவடிக்கை எடுக்கும்
வகையில் Talent Search at School Level (SI.No:
73.f) எனும் செயல்பாட்டின் மூலம்
திறனறிப் போட்டிகள் நடத்த
அனுமதிக்கப்பட்டுள்ளது.
இச்செயல்பாட்டின் நோக்கம், மாணவர்கள்
பாடப்புத்தங்களைத் தாண்டி,
தங்களது பொது அறிவை
வளர்த்துக் கொள்ளவும், புதிய
மற்றும் மாறுபட்ட கோணத்தில்
சிந்திக்கவும், ஆழமான
விவாதம் செய்யக்கூடிய சூழல்
மற்றும் குழுமனப்பான்மையை உருவாக்கவும், மாணவர்கள் திறமையை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கும் வகையிலும், மாணவர்களின் முழு ஆளுமைத்திறனை வளர்க்க
நடவடிக்கை எடுக்கும் வகையிலும்
திறனறிப் போட்டிகளை நடத்தி
அதன் மூலம் வெற்றி
பெறும் மாணவர்கள் போட்டித்
தேர்வுகளில் (NTSE, TRUST) பங்கு
பெற்று பயன்பெறச் செய்வதாகும்.
அரசு
உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 9, 10 மற்றும் 11, 12 ஆம்
வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு என தனித்தனியாக கட்டுரை
எழுதுதல் / பேச்சுப் போட்டி
போன்ற திறனறிப் போட்டிகளை
மாணவர்களுக்கு கல்வி
மாவட்டம் மற்றும் மாவட்ட
அளவில் நடத்திட அறிவுறுத்தப்படுகிறது.
Notification: Click
Here
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


