சிவகங்கை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்காக புதிய இலவச அழகுக்கலை, ஒப்பனை மற்றும் பச்சை குத்துதல் பயிற்சி (Tattoo Making, Aesthetic & Semi Permanent Makeup Courses) வழங்கப்பட உள்ளது.
மாவட்ட ஆட்சித்தலைவர் கா. பொற்கொடி அவர்கள் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ – TAHDCO) சார்பாக இப்பயிற்சி தனியார் நிறுவனங்களுடன் இணைந்து வழங்கப்படுகிறது. இதன் நோக்கம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன்களை மேம்படுத்தி, வேலை வாய்ப்பை உறுதி செய்வதாகும்.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
🎓 பயிற்சி விவரங்கள்:
- பயிற்சி பெயர்: ஒப்பனை, அழகுக்கலை மற்றும் பச்சை குத்துதல் (Tattoo, Aesthetic & Makeup Courses)
- பயிற்சி காலம்: 90 நாட்கள்
- இடம்: திருச்சி மாவட்டம்
- அமைப்பு: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (TAHDCO)
- பயிற்சி கட்டணம்: இலவசம் (Free)
👩🎓 தகுதி விவரங்கள்:
- இனம்: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மட்டும்
- கல்வித்தகுதி: 8ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்தவர்கள்
- வயது வரம்பு: 18 முதல் 35 வயது வரை
- குடும்ப வருமானம்: ஆண்டுக்கு ரூ.3 லட்சத்தை மிகாமை
- தங்கும் வசதி: பயிற்சியின் முழு காலத்திலும் திருச்சியில் தங்கி படிப்பதற்கான செலவினம் தாட்கோவால் வழங்கப்படும்
💼 பயிற்சி முடிந்த பின் வேலைவாய்ப்பு:
பயிற்சி முடித்த தகுதியான நபர்கள் பயிற்சி வழங்கும் நிறுவனத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டு, மாதம் ₹15,000 முதல் ₹25,000 வரையான ஊதியம் பெறும் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும்.
🖥️ விண்ணப்பிக்கும் முறை:
பயிற்சியில் சேர விரும்புவோர் தாட்கோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்:
🌐 www.tahdco.com
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram

