மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான, பி.எட்., சிறப்பு கல்விக்கு விண்ணப்பிக்கலாம்.சென்னை, கோட்டூர்புரத்தில் 38 ஆண்டுகளாக வித்யா சாகர் கல்வி நிறுவனம் செயல்படுகிறது.
இங்கு, பலவிதமான மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கற்பிக்கும் வகையில், ஆசிரியர் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த சிறப்பு பி.எட்., படிப்புக்கான விண்ணப்பம் துவங்கியுள்ளது. மொத்தம், 30 இடங்கள் மட்டுமே உள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளோர், 98400 35203 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.