HomeNewslatest news📌 வெளியூரில் வேலை! வீட்டிற்கு SIR படிவம் வந்திருக்கா? உங்க கையெழுத்து தேவையா? | முழு...

📌 வெளியூரில் வேலை! வீட்டிற்கு SIR படிவம் வந்திருக்கா? உங்க கையெழுத்து தேவையா? | முழு Q&A விளக்கம்

சிறப்பு தீவிர திருத்த (SIR) விண்ணப்பம் தற்போது தமிழ்நாட்டின் பெரும்பாலான வீடுகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனா ஒரு பெரிய சந்தேகம் எல்லாருக்கும்:

👉 “நான் வெளியூரிலோ / வெளிமாநிலத்திலோ / வெளிநாட்டிலோ இருக்கேன்… இந்த SIR படிவத்தை என்ன செய்வது?”
👉 “என் கையெழுத்து இல்லாமல் சமர்ப்பிக்க முடியுமா?”

📚 4500+ PDF Files Updated in Our Premium Group – Join Now to Download Directly 💎

TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

இதுக்கான தெளிவான பதில் இதுதான். 👇


📌 SIR படிவத்தில் ஏற்கெனவே என்னென்ன தகவல்கள் இருக்கும்?

வாக்குச்சாவடி அலுவலர் தந்த படிவத்தில் பொதுவாக:

  • உங்கள் பெயர்
  • வாக்காளர் அடையாள அட்டை எண் (EPIC No)
  • முகவரி
  • சட்டமன்றத் தொகுதி பெயர்
  • பகுதி எண், வரிசை எண்
  • புகைப்படம்

இதெல்லாம் முன்பே இருந்திருக்கும்.

பூர்த்தி செய்ய வேண்டிய விவரங்கள்:

  • பிறந்த தேதி
  • ஆதார் எண் (விருப்பப்படி – கட்டாயம் இல்லை)
  • மொபைல் எண்
  • தந்தை / தாய் / கணவர் / மனைவி பெயர்
  • அவர்களின் EPIC No (இருந்தால்)
  • 2002 / 2005 தீவிர திருத்த விவரங்கள் (தேவைப்பட்டால்)

✔️ கையெழுத்து யார் போடலாம்? (இந்த கேள்விக்கே எல்லாரும் பதில் தேடுறாங்க!)

👉 நீங்க வீட்டில் இல்லாத நிலையில, உங்கள் கையெழுத்து அவசியம் இல்லை.
👉 உங்க சார்பாக குடும்பத்தில இருக்கும் ஒருவர் படிவத்தை பூர்த்தி செய்து கையெழுத்து போடலாம்.

யாரெல்லாம் கையெழுத்து போடலாம்?

  • தந்தை
  • தாய்
  • தாத்தா
  • பாட்டி
  • 18 வயதுக்கு மேற்பட்ட சகோதரர் / சகோதரி
  • கணவர் / மனைவி

💡 கையெழுத்து இல்லை என்றால் ➝ இடது பெருவிரல் கைரேகை போதும்.


✔️ நான் இல்லாமலே படிவத்தை வீட்டில உள்ளவர்கள் சமர்ப்பிக்கலாமா?

ஆம்! 100% லாம்.

விதிமுறைகள் படி,
👉 உங்கள் சார்பாக குடும்ப உறுப்பினர் ஒருவர் படிவத்தை பூர்த்தி செய்து
கையெழுத்திட்டு BLO (Booth Level Officer) க்கு கொடுத்தால் போதும்.


✔️ வீட்டில் உள்ளவர்கள் தகவல் தெரியாமல் இருந்தால்?

வந்திருக்கும் படிவத்தில் சில விபரங்கள் தெரியாமலிருந்தால் கவலைப்பட வேண்டாம்.

👉 உங்கள் வாக்குச்சாவடி அலுவலரிடம் (BLO) கேட்டு பூர்த்தி செய்யலாம்.
👉 அவர்கள் உதவி செய்ய கட்டாயம் இருக்க வேண்டும்.


📌 முக்கியமாக நினைவில் வைத்துக்கோங்க

  • SIR படிவத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: டிசம்பர் 4, 2025
  • உங்க பெயர் வாக்காளர் பட்டியலில் சரியாக இருக்க வேண்டுமானால் இந்த படிவத்தை கொடுக்கணும்
  • வெளியூரில் இருப்பது காரணம் காட்டி படிவத்தை விடக்கூடாது
  • குடும்பத்தில 18+ வயது உள்ள யாரும் உங்க சார்பாக சமர்ப்பிக்கலாம்

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

5000+ Notes PDF Group ₹365/Year – Per day ₹1 Rs