ஆன்லைனில் குழந்தைகளுக்கான ஆதார் அட்டை எடுக்க
எளிய வழிமுறைகள்
ஆதார்
அட்டை இல்லாத குழந்தைகளுக்கு புதிய ஆதார் அட்டை
எடுத்துக் கொள்ள எளிய
வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு ஆதார் அட்டை எடுப்பதற்கு பிறப்பு சான்றிதழே போதுமானது.
இதில் 5 வயதுக்கு மேல்
உள்ள குழந்தைகளுக்கு பயோமெட்ரிக் முறையின் மூலம் ஆதார்
அட்டைக்கு தேவையான தகவல்கள்
பெறப்படும். அதே நேரத்தில்
5 வயதுக்கு கீழ் உள்ள
குழந்தைகளுக்கு பிறப்பு
சான்றிதழ் மற்றும் பிற
தகவல்களுடன் பால் ஆதார்
அட்டை என்று வழங்கப்படுகிறது.
குழந்தைகளின் பெற்றோர்களின் விவரங்களுடன், குழந்தைகளின் போட்டோ,
பள்ளி ஐடி கார்டுகளுடன் ஆதார் மையத்திற்கு சென்றால்
குழந்தைகளின் ஆதார்
தகவல்களுடன் பெற்றோர்களின் ஆதார்
தகவல்கள் இணைக்கப்படும். இப்படி
ஆதார் மையத்தில் பதிவு
செய்யப்படும் ஆதார்
அட்டை 90 நாட்களுக்குள் வீட்டு
முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். பால் ஆதார் அட்டை
உள்ள குழந்தைகளுக்கு 5 வயதில்
ஒருமுறையும், 15 வயதில் ஒரு
முறையும் ஆதார் அட்டை
அவசியம் அப்டேட் செய்யப்பட
வேண்டும்.
ஆன்லைன்
மூலம் விண்ணப்பிக்க https://appointments.uidai.gov.in/bookappointment.aspx
என்ற இணையதளத்துக்கு சென்று
நியூ ஆதார் அல்லது
ஆதார் அப்டேட் என்பதை
Click செய்யவும்.
அதில்
குழந்தைகளின் பெயர்,
முகவரி, பெற்றோரின் தகவல்கள்,
நகரம், மொபைல் எண்,
ஈமெயில் போன்றவை கேட்கப்படும்.
இவை
அனைத்தையும் பூர்த்தி செய்த
பிறகு வீட்டு முகவரி,
ஊர், மாவட்டம், மாநிலம்
ஆகியவற்றை நிரப்ப வேண்டும்.
பிறகு Fixed appointment என்ற
ஆப்ஷனை தேர்வு செய்ய
வேண்டும்.
அதில்
ஆதார் எண் பதிவுக்கான தேதியை தேர்வு செய்து
உங்கள் இடத்துக்கு அருகில்
இருக்கும் ஆதார் மையத்தை
தேர்வு செய்ய வேண்டும்.
பின்பாக
தேவையான ஆவணங்கள் மற்றும்
ரெபரன்ஸ் எண்ணுடன் குறிப்பிட்ட தேதியில் ஆதார் மையத்திற்கு சென்றால் Verification செய்யப்படும்.
Verification முடிந்த பிறகு
உங்கள் மொபைல் எண்ணுக்கு
குறுஞ்செய்தி அனுப்படும். அதன் பிறகு உங்கள்
குழந்தைக்கான ஆதார்
அட்டை வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


