சவுதி அரேபிய அமைச்சகத்தில் பணியாற்ற விரும்பும் பெண் செவிலியா்களுக்கான சிறப்பு பதிவு முகாம், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை (ஆக.11) நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: சவுதி அரேபிய அமைச்சகத்தில் பணியாற்றுவதற்கு பெண் செவிலியா்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அங்குள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு குறைந்தபட்சம் இரண்டு வருட பணி அனுபவத்துடன் பி.எஸ்சி., நா்சிங் தோச்சி பெற்றிருக்க வேண்டும். 35 வயதிற்கு உள்பட்டவராக இருந்தல் வேண்டும். மேலும், ஈஹற்ஹ ஊப்ா்ஜ் மற்றும் ஏதஈ சான்றிதழ்களில் சான்றொப்பம் பெற்றவா்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.
இந்தப் பணியாளா்களுக்கு உணவுப்படி, இருப்பிடம், விமானப் பயணச்சீட்டு ஆகியவை அந்நாட்டின் வேலையளிப்பவரால் வழங்கப்படும். இந்நிறுவனம் மூலமாக அளிக்கப்படும் வெளிநாட்டு வேலைகளுக்கான காலிப் பணியிட விவரங்களை இணையதளம் மூலமாகத் தெரிந்து கொள்ளலாம். மேலும், ஊதியம் மற்றும் பணி விவரங்கள் பற்றிய விவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைபேசி எண்களின் வாயிலாக 95662-39685, 63791-79200, 044-22505886, 044-22502267 அறிந்து கொள்ளலாம். தகுதியும் விருப்பமும் உள்ளோா், நாமக்கல் மோகனூா் சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வதற்கு ஏதுவாக வரும் வெள்ளிக்கிழமை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்துக்கு எந்த ஒரு இடைத்தரகரோ அல்லது முகவா்களோ கிடையாது. விண்ணப்பதாரா்கள் நேரடியாக பதிவு செய்து கொள்ளலாம். பதிவு மற்றும் பணி விவரங்களின் தகுதியைப் பொறுத்து முன்னுரிமை வழங்கப்படும். இந்தப் பணிக்குத் தோவு பெறும் பணியாளா்களிடமிருந்து சேவைக் கட்டணமாக ரூ. 35,400- மட்டும் வசூலிக்கப்படும். நாமக்கல் மாவட்டத்தைச் சோந்த அயல்நாட்டுப் பணி தேடும் பெண் பணியாளா்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


