HomeBlogகணவனால் கைவிடப்பட்ட பெண்ணுக்கு ஆவணங்களின்றி தனி ரேஷன் கார்டு

கணவனால் கைவிடப்பட்ட பெண்ணுக்கு ஆவணங்களின்றி தனி ரேஷன் கார்டு

கணவனால் கைவிடப்பட்ட பெண்ணுக்கு ஆவணங்களின்றி தனி
ரேஷன் கார்டு

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஒரு
பெண் கணவரால் நிராதரவாக
கைவிடப்பட்டு அல்லது
மணவாழ்வு முறிவுற்று தனியாக
வசித்துவரும் நிலையில்,
அவரது ஆதார் எண்
கணவர் வைத்திருக்கும் குடும்ப
அட்டையில் இணைக்கப்பட்டுள்ள நேர்வுகளில், சம்பந்தப்பட்ட பெண்
மற்றும் அவரை சார்ந்துள்ள குழந்தைகள் தனியாக வசித்து
வருவது தணிக்கை மூலம்
உறுதி செய்யப்படும்.

இதைத்
தொடர்ந்து, எழுத்து மூலமான
வாக்குமூலம் பெற்று, சம்பந்தப்பட்ட அலுவலர் தனது அதிகார
வரம்பினை பயன்படுத்தி குடும்பத்தலைவரின் அனுமதியில்லாமல் சம்பந்தப்பட்ட பெண்ணின் பெயரினை குடும்ப
அட்டையில் இருந்து நீக்கவும்,
தனியாக வாழும் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு புதிய குடும்ப
அட்டை கோரும்போது சட்டபூர்வமான நீதிமன்ற விவாகரத்து சான்று
போன்ற ஆவணங்கள் ஏதும்
சமர்ப்பிக்க வலியுறுத்தாமல் புதிய
குடும்ப அட்டை வழங்க
நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென
உணவு பொருள் வழங்கல்
மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்நிலை அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular