பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்கள் பற்றி புகாரளிக்க தனி
Portal
பண
மோசடிகள் பற்றி உடனே
புகார் அளிக்க தனி
தொலைபேசி எண்ணும் பெண்கள்
மற்றும் குழந்தைகளுக்கு எதிரான
சைபர் குற்றங்கள் பற்றி
புகார் தர தனி
போர்ட்டலும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தி.மு.க.
மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர்
கனிமொழி என்.வி.என்.
சோமு எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் தி.மு.க.
நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி
, நாட்டில் அதிகரித்துவரும் சைபர்
குற்றங்களைத் தடுக்க
மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் பற்றி
கேள்வி எழுப்பினார். அதற்கு
உள்துறை இணையமைச்சர் அஜய்
குமார் மிஸ்ரா எழுத்து
மூலமாக பதில் அளித்தார்.
அவர்
அளித்த பதிலில், காவல்துறை
மற்றும் சட்டம் ஒழுங்கை
பராமரிப்பது போன்றவை மாநில
அரசின் கட்டுப்பாட்டுக்குள் வருவதால்,
சைபர் குற்றங்களைத் தடுக்கவும், அக்குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை பெற்றுத்
தரவும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தர
வேண்டியது அந்தந்த மாநில
அரசுகளின் கடமை.
ஆனாலும்
இந்த விஷயத்தில் விசாரணை
அமைப்புகளுக்கு உதவும்
வகையில் மத்திய அரசு
பல்வேறு வகைகளில் மாநில
அரசுகளுக்கு உதவி வருகிறது.
அதன்படி, சைபர் குற்றங்களை திட்டமிட்ட ஒருங்கிணைப்பின் மூலம்
எதிர்கொள்ளும் வகையில்
‘இந்திய சைபர் குற்றங்கள் ஒருங்கிணைப்பு மையம்‘
ஒன்றை மத்திய அரசு
நிறுவியிருக்கிறது. அத்துடன்
டெல்லி துவாரகாவில் ‘தேசிய
சைபர் தடயவியல் ஆய்வகம்‘
ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது.
அதுமட்டுமின்றி சைபர் குற்றங்கள் தொடர்பாக
விசாரனை நடத்தும் அதிகாரிகள், அரசு வழக்கறிஞர்கள், நீதித்துறை அதிகாரிகளுக்கு ஆன்லைன்
மூலம் பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப்
பயிற்சியைப் பெற இதுவரை
சுமார் எட்டாயிரம் பேர்
பதிவு செய்திருக்கிறார்கள். 1800 பேர்
பயிற்சியை நிறைவு செய்திருக்கிறார்கள்.
சைபர்
குற்றங்கள் நிகழ்ந்தால் குறிப்பாக
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக இந்தவகை குற்றங்கள் நிகழ்ந்தால், அவர்கள் எந்தவித
தயக்கமோ தடையோ இல்லாமல்
புகார் அளிக்க தனியாக
இணைய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. (www.cybercrime.gov.in) இந்தப் போர்ட்டலில் புகார் பெறப்பட்ட பிறகு,
சம்பந்தப்பட்ட மாநில
அரசே விசாரணையைத் தொடரும்.
இதுதவிர
பணமோசடிகள் பற்றிய புகார்களை
உடனடியாகத் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி வசதியும் ( 155260 ) செய்து
தரப்பட்டிருக்கிறது.
அத்துடன்,
நாட்டை ஏழு பகுதிகளாகப் பிரித்து சைபர் குற்றங்கள் அதிகமாக நடக்கும் பகுதிகளைக் கண்டறிந்து ஏழு பிரத்யேக
ஒருங்கிணைப்புக் குழுக்கள்
அப்பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பெண்கள்
மற்றும் குழந்தைகளுக்கு எதிரான
சைபர் குற்ற விசாரணைகளை விரைவுபடுத்த பயிற்சியுடன் கூடிய தடயவியல் ஆய்வகங்கள் 28 மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த
பயிற்சி மையங்களில் இதுவரை
19,000 க்கும் மேற்பட்ட காவல்துறை
அதிகாரிகள், நீதித்துறை அதிகாரிகள் மற்றும் அரசு வழக்கறிஞர்களுக்கு பெண்கள் மற்றும்
குழந்தைகளுக்கு எதிரான
குற்றங்களை எதிர்கொள்ள பயிற்சி
அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு
மத்திய அமைச்சர் அஜய்
குமார் மிஸ்ரா பதிலளித்துள்ளார்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram

